தமிழகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் நாளையுடம் 6ம் கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர்
அரசின் விரைவான நடவடிக்கைகளால் சென்னையில் பாதிப்பு குறைந்துள்ளது. இதுவரை 14 லட்சம் பேர் காய்ச்சல் முகாம்களால் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. அனைவருக்கும் தமிழக அரசின் மூலம் இலவச முக கவசம் வழங்கப்படுகிறது. அதிக பரிசோதனை கூடங்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான்.இந்தியாவிலேயே 25,36,660 பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன என கூறினார்.
இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட். 31 வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 31 ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
- ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படும்* நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் ஆக.31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவருந்த அனுமதி
- சென்னையில் ஆக.1 முதல் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்
- சென்னையில் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி
- நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி
- மாநகராட்சி பகுதிகளில் உள்ள கோவில், மசூதி, தேவாலங்களில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை
- தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பேரூராட்சி, நகராட்சிகளில் சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலங்களை திறக்க அனுமதி
- பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்
- பிற மாவட்டங்களில் ஆண்டு வருமானம் ரூ.10,000க்கு குறைவான வருமானம் கொண்ட கோவில், தேவாலயம், மசூதிகளை திறக்கலாம்
- மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள், வருபவர்கள் இ பாஸ் பெறுவது ஆகஸ்ட் மாதத்தில் கட்டாயம்
- நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு தொடரும்
- மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடை தொடரும்
- திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்
- மெட்ரோ ரெயில், மின்சார ரெயில்களுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும்
- ரெயில், விமானப் போக்குவரத்து விஷயத்தில் தற்போதைய நடைமுறை தொடரும் இவ்வாறு அவர் கூறி உள்ளார்.