tamilnadu

img

மக்கள் நலக் கோரிக்கைகளை நிறைவேற்றுக... இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி:
சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சார்பில் மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நிவாரணம்வழங்க வேண்டும். தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும். நூறு நாள்திட்டத்தை 200 நாளாக உயர்த்தவேண்டும் உள்ளிட்டவை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 

தூத்துக்குடி சிதம்பர நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் சங்கரன், சிபிஐ மாநகர் செயலாளர் ஞானசேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம்மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ரசல், பேச்சிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர்கள் தி.குமாரவேல், பொன்ராஜ், காசி, மாரியப்பன், பூமயில், ராஜா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.எஸ.முத்து, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜாய்சன், சிபிஐ சார்பில் மாடசாமி, பாண்டி, அந்தோனி சவுந்தரராஜன், சேகர், முத்து கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி  ஒன்றியச் செயலாளர் நம்பிராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  ஒன்றியச் செயலாளர் அம்பிகாபதி ஆகியோர் தலைமை வகித்தனர். ராமச்சந்திரன் கருங்குளம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் முன்னிலை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கணபதி, ராமச்சந்திரன், ராமலிங்கம், சுவாமிதாஸ், சிபிஐ நகர செயலாளர் நடராஜன், ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கட்சிகருங்குளம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கண்ணன், மாரியப்பன், மணி, சின்னதுரை மற்றும் தோழமை சங்கத்தினர் அரசு போக்குவரத்து சங்கிலிப் பூதத்தான் ஆறுமுகம், உலகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

நெல்லை

நெல்லை ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர் காசிவிஸ்வநாதன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலர் சங்கரபாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக, அண்மையில் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கணேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் நிறைவுரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சிமாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.ஜெயராஜ், எம்.சுடலைராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பெருமாள், பாளை தாலுகாசெயலாளர் வரகுணன் போக்குவரத்து தொழிலாளர் சங்க ஜோதி,எஸ்.கே.செந்தில், டவுன் நாராயணன் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தென்காசி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி ஓன்றிய செயலாளர் தங்கம் தலைமை தாங்கினார். சி.பி.எம்மாவட்ட குழு உறுப்பினர் எம்.வேல்முருகன், தாலுகா குழு உறுப்பினர்கள் ஆரியமுல்லை, மகாவிஷ்ணு, என்.முருகேசன், அறிஞர் கிளை செயலாளர் மாதவன், சண்முகம், ஆவுடையப்பன், முத்துலெட்சுமி பங்கேற்றனர்.சிவகிரியில் சி.பி.எம் ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.ராமசுப்பு, சிபிஐநகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தனர். சிபிஎம் சார்பில் மாற்றுத்திறனாளி சங்க தலைவர் சக்திவேல், ஒன்றிய கமிட்டி உறுப்பினர் சுப்பிரமணியன், பெரியசாமி, சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், ரவீந்திரநாத் பாரதி, கே.எம்.கிருஷ்ணன், கருப்பையா, சிஐடியு மின்வாரிய மாவட்ட துணை செயலாளர் குருசாமி, சிஐடியு போக்குவரத்து மத்திய சங்க துணை தலைவர் அமல்ராஜ், ராமர், கந்தன், மின்வாரிய வேலுச்சாமி குருசாமி, சிபிஐ சார்பில் ப.வேலுச்சாமி, செ‌.ராமர், ச‌.குருசாமி, ராமமூர்த்தி, வே.மாரியப்பன், கா.ஜோதி, ராமலிங்கம், ராஜேந்திரன், வே.கோபி, க.கிருஷ்ணன், கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் 

நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சிமாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்செயலாளர் எஸ்.இசக்கிமுத்து, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.முருகேசன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் அய்யப்
பன் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அகமது உசேன், தங்கமோகன், மாநகர செயலாளர் கே.மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரசெயலாளர் இசக்கிமுத்து கலந்து கொண்டனர். குமரி மாவட்டம் முழுவதும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எட்டையபுரம்

எட்டையபுரம் பட்டத்துவினாயகர் கோவில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் தாலுகாசெயலாளர் கு.ரவீந்திரன், சிபிஐதாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினர். சிபிஎம் சார்பில் தாலுகா குழு உறுப்பினர்கள் செல்வகுமார், நடராஜன், முருகேசன், பாலமுருகன், ராமர், முத்தழகு, சிஐடியு ஆட்டோ சங்க தலைவர் கண்ணன், சிபிஐசார்பில் நகர செயலாளர் சேதுராம சுப்பு, ரவீந்திரன், வண்டிமலையான்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

;