tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

நமது விவசாயத் துறையையும் விவசாயிகளையும் அழிப்பதற்கு வழிகோலும் சட்டங்களை நாம் எதிர்த்துள்ளோம்; முழுமையாக நிராகரித்துள்ளோம். இந்த சட்டங்கள் குறித்து பொய் தகவல்களை பரப்புவதில் பிரதமர் மோடியே தலைமை தாங்குகிறார். நம்முடைய எதிர்ப்பு என்பது குறைந்தபட்ச ஆதார விலை குறித்து மட்டுமே என தவறான கருத்தாக்கம் உருவாக்கப்படுகிறது.நமக்கு அன்னமிடும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை மிகவும் முக்கியமானதுதான்! அவர்கள் விவசாய நெருக்கடி காரணமாகவும் தாங்க முடியாத கடன் காரணமாகவும் தமது உயிரை மாய்த்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். அதே சமயத்தில் இந்த சட்டங்கள் இந்திய விவசாயத்தையும் நமது நிலங்களையும் சந்தைகளையும் பன்னாட்டு விவசாய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துவிடும். இதன் காரணமாக இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு கடுமையாக ஆபத்துக்கு உள்ளாகும்.

இந்த வேளாண் சட்டங்கள் உணவுப் பொருட்களை பதுக்குவதற்கும் அதன் விளைவாக விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கும். செயற்கையான உணவு பற்றாக்குறையையும் உருவாக்கும். பெரும்பான்மையான மக்கள் விலை உயர்வு காரணமாக உணவுப் பொருட்களை வாங்க  இயலாத சூழல் ஏற்படும். மேலும் நியாய விலைக்கடைகள் உட்பட பொது வினியோக முறையை முற்றிலுமாக அழிப்பதற்கு இந்த சட்டங்கள் வழிவகுக்கும். இந்த வேளாண் சட்டங்கள் “நிலங்களின் தொகுப்பை” உரு வாக்குவதன் மூலம் சிறு குறு விவசாயத்தை அழித்து விடும். மோடிஜி அவர்களே! இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மையானது எனும் உங்களுடைய பொய்ப் பிரச்சாரத்திற்கு மாறாக இந்த சட்டங்கள் சிறு - குறு விவசாயிகளின்  வாழ்வாதாரத்தை அழித்து விடும்.

ஆனாலும் கூட நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அரசு இந்த மசோதாக்களை அராஜகமாக நிறைவேற்றியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெட்டுத் தீர்மானங்களை கொண்டுவரும் உரிமையை முற்றாக நிராகரித்து, எதேச்சதிகாரமான முறையில் இது நடந்துள்ளது. சுயசார்பு இந்தியாவுக்கு பதிலாக சுய சரணாகதி இந்தியாவை உருவாக்குவதை எதிர்த்து செப்டம்பர் 25-ஆம் தேதி நடைபெறும் விவசாயிகளது தேசிய எதிர்ப்பு தினத்திற்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் வாசிக்க... 

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் :   https://twitter.com/SitaramYechury

;