tamilnadu

img

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் கவலைக்கிடம்?   பிளாஸ்மா சிகிச்சைக்கு ஏற்பாடு....  

கவுஹாத்தி 
அசாம் மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய்க்கு (85) கடந்த வாரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் கவுஹாத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் நேற்றிரவு திடீரென அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு சென்றது. இதனால் தருண் கோகாய்-க்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்து வருகின்றனர். இந்த தகவலை அம்மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.   

;