tamilnadu

img

அடுத்த 3 காலாண்டுகளுக்கும் ஜிடிபி வளர்ச்சி இருக்காது.... இந்திய பொருளாதாரம் 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில், பொருளாதாரப் பாதிப்பு கொரோனாவைக் காட்டிலும்மிகமோசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஆய்வு நிறுவனங்கள் கூறி வருகின்றன.
2020-ஆம் ஆண்டுக்கான, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பை. - 0.5 சதவிகிதமாக நோமுரா குறைத்துள்ளது. பிட்ச்ரேட்டிங்ஸ் 4.6 சதவிகிதத்திலிருந்து 1.8 சதவிகிதமாகக் குறைத்துள்ளது.கோல்ட்மேன் சாச்ஸ், இந்தியாவின் பொருளாதாரம் ஜூன் காலாண்டில் 45 சதவிகித வீழ்ச்சியை சந்திக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதம் வீழ்ச்சி அடையும் என்று கணித்துள்ளது.

2020-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி 5.1 சதவிகிதமாகவும், இரண்டாம் காலாண்டில் 5.6 சதவிகிதமாகவும், மூன்றாம் காலாண்டில் 4.7 சதவிகிதமாகவும் இருந்தது. இந்நிலையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 1.2 சதவிகிதம் மட்டுமே என்று தெரிவித்துள்ளது. மேலும், 2020-ஆம் ஆண்டின் மொத்த ஜிடிபி 4.2 சதவிகிதம்என்றும், 2021-ஆம் ஆண்டில் ஜிடிபி (-) 6.8 சதவிகிதம் என்றும் கணித்துள்ளது.இந்நிலையில்தான், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மந்த நிலையை இந்தியப்பொருளாதாரம் சந்தித்துக் கொண்டு இருப்பதாக ‘கிரிசில்’ நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 69 ஆண்டுகளில் இந்தியா மூன்றுமுறை மட்டுமே பொருளாதார நெருக்கடி மற்றும் மந்த நிலையை கண்டிருக்கிறது. சில தரவுகளின்படி, 1958 மற்றும் 1966, 1980 ஆகிய நிதியாண்டுகளில் இந்தியா மந்த நிலையை எதிர்கொண்டு இருக்கிறது. அதற்குப்பின், இப்போதுதான் 2020-இல் மீண்டும் பொருளாதார மந்தத்தை இந்தியா சந்தித்து வருகிறது என்று ‘கிரிசில்’ குறிப்பிட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 5 சதவிகிதமாக சுருங்கும் என்று கூறியிருக்கும் கிரிசில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) ஜிடிபி25 சதவிகித வீழ்ச்சியைச் சந்திக்கும் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு முன்னர்காணப்பட்ட வளர்ச்சி விகிதம், அடுத்தமூன்று காலாண்டுகளுக்கு சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளது.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதத்தை நிரந்தரமாகவேஇழக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.

மேலும், ஏப்ரல் - ஜூன் காலாண்டில் விவசாயம் சாரா பொருளாதாரம் மட்டும் அல்ல, சேவைத்துறையை சேர்ந்த கல்வி,பயணம், சுற்றுலா போன்ற சேவைகளும் தொடர்ந்து பின்னடைவை சந்திக்கக் கூடும்.இதனால் பணியிழப்பு மற்றும் வருவாய் சரிவும் தொடரும். கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் பொருளாதாரம் மிக நீண்ட காலத்திற்குமோசமான நிலைக்கு தள்ளப்படலாம். கொரோனா தொற்று அதிகரிப்பால், செலவினங்களும் அதிகரிக்கும் பாதகமான விஷயங்களை அடுக்கியுள்ளது.

;