tamilnadu

img

4800 பேருக்கு டெங்குவா...? அதெல்லாம் ஒண்ணும் செய்யாது... மாத்திரை டோசேஜை கூட்டினால் போதும்...

டேராடூன்:
டெங்கு காய்ச்சலுக்கு, உட்கொள்ளும் மாத்திரையின் டோசேஜை அதிகரித் தால் போதும், மற்றபடி ஒன்றும் செய்யாது என்று உத்தர்கண்ட் பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் அலட்சியமாக கூறியுள்ளார்.உத்தர்கண்ட் மாநிலத் தில் சுமார் 4800 பேருக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு இருப்பதுகண்டறியப்பட்டு உள்ளது. டேராடூனில் இதுவரை 3ஆயிரம் பேரும், ஹல்த்வானியில் 1,100 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப் பதை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். மேலும், இவர்களில் டேராடூனில் 4 பேர், ஹல்த்வானியில் 2 பேர்என இறந்தும் போயிருக்கின்றனர். மாநில சுகாதாரத்துறை அறிக்கையிலேயே, செப்டம்பர் 17 வரை, 8 பேர் இறந்துள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.இவ்வளவுக்கும் பிறகுதான், உத்தர்கண்ட் மாநிலத்தில் கொசுக்களால் பரவும் தொற்றுநோய் அதிகரித்துள்ளதே...? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “டெங்கு நோயினால் பாதிக் கப்பட்ட நோயாளிகள், பாராசிட்டமால் மருந்தினை 500மில்லி கிராம் டோசேஜூக்குப்பதிலாக, 650 மில்லி கிராம்டோசேஜ் அளவில் உட்கொண்டு, சிறிது ஓய்வெடுத் தால் நோய் குணமாகி விடப் போகிறது” என்று வெகு இயல்பாக திரிவேந்திரா சிங் பேசியுள்ளார்.

;