tamilnadu

img

வெள்ளப்பெருக்கால் நிலைகுலைந்த பகுதிகளில் துயரங்களை எதிர்கொள்ள கற்றுத்தரும் குட்டநாடு

ஆலப்புழா:
கோவிட் நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றி 75 பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள். பின்னர்  அவர்கள் ஒவ்வொருவரும் வார்டுகளில் தலா 5 நபர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். மழை அதிகரித்தால் எங்கெங்கு நீர்மட்டம் உயரும், கோவிட் காலத்தில் பேரிடர் நிவாரணப் பணிகளின் தன்மை என்னவாக இருக்கும்?இதற்கு விடைகாண பேரிடர் நிவாரணத் திட்டத்தை கேரளத்தில் முதல்முறையாக செயல்படுத்திய நெடுமுடி பஞ்சாயத்தில்தான் ‘அவசர பொறுப்புக் குழு’ (ERT) என்கிற தன்னார்வ படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. உள்ளூர் வளங்களையும், வேலை உறுதி திட்ட தொழிலாளர்களையும் ஒருங்கி ணைத்து நீரோடைகளுக்கு வரப்புகள் அமைக்கும் பணி இங்கு வேக மாக நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்திற்கு அடிப்படையே பஞ்சாயத்தின் பேரிடர் நிவாரண திட்டஆவணமாகும். பேரிடர் மேலாண்மை ஆணையம், கிலா (Kerala Institute of Local Administration), ஐஐடிமும்பை போன்றவற்றின் உதவி யுடன் நெடுமுடி பஞ்சாயத்துதான் முதன்முதலாக பேரிடர் நிவாரண திட்ட ஆவணம் தயாரித்தது.

 2017, 18, 19 வெள்ளப்பெருக்குகள் நெடுமுடி பஞ்சாயத்தில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட நிலப்பரப் பில் ஒரு மீட்டருக்கும் மேல் வெள்ளம் தேங்கியதாக வல்லுநர் குழுகண்டறிந்தது. மழை பெய்து பாய்ந்து வரும் வெள்ளத்தை மேடான பகுதியில் இருந்து வெளியேற்ற முடியாததே இங்கு சிறிய அளவிலான வெள்ளப் பெருக்குக்கு காரணம் என்பதும் கண்டறியப்பட்டது. 2018 இல் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பஞ்சாயத்தின் 37 சாகுபடி பகுதிகளில் 1368 எக்டேர் நிலத்தில் உள்ள பயிர்கள்நாசமாகின. அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.அருகில் உள்ள செம்பகச்சேரி, சீதக்கோடு நீரோடைகளில் இருந்து சேறு அகற்றி அதனுடன் கயிறைபயன்படுத்தி வரப்பு அமைக்கப்படு கிறது.

இதன் மீது பயணம் மேற்கொள்வதும் எளிதாகும். சேறு அகற்றி ஆழம் அதிகரிக்கப்பட்ட நீரோடை வழியாக மழை வெள்ளம் பம்பை ஆற்றுக்கு எளிதாக பாய்ந்துசெல்லும் என்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்க முடியும். சேறு அள்ளி அகற்ற மட்டும்ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்படு கிறது. மீதமுள்ள பணிகள் அனைத்தையும் மகாத்மா காந்தி தேசியஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள். புலுங்குந்நு பொறியியல் கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்ப மேற்பார்வையும் இதற்கு உதவி வருகிறது. சோதனை முறையிலான இந்த திட்டத்திற்கு மாநில பட்ஜெட்டிலிருந்து வழங்கிய ரூ .30 லட்சம், பஞ்சாயத்து நிதி ரூ .50 லட்சம் மற்றும் கயிறு வாரியம் அளித்தகயிற்றால் ஆன நிலப்போர்வைகள் என்று இங்கு ரூ.177 லட்சம் மதிப்பிலான திட்டம் நிறைவேற்றப் படுவதாக பஞ்சாயத்து தலைவர் எம்.கே.சாக்கோ தெரிவித்தார்.

;