tamilnadu

img

டிவிட்டர் நிறுவனத்துக்கு  மத்திய அரசு நோட்டீஸ்

புதுதில்லி,ஜூலை 19- பிரபலங்களின் கணக்குகளில் புகுந்து மோசடி செய்யப்பட்டது தொடர்பாக டிவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர்  ஒபாமா, அமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெசோஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உள்ளிட்ட பிர பலங்களின் டிவிட்டர் கணக்கில் சமீபத்தில் மர்ம நபர்கள் ஊடுருவி பிட்காயின் மோசடியில் ஈடுபட்டனர். இதில் இந்திய பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது டிவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சைபர் பாதுகாப்பு பொறுப்பு அமைப்பான சி.இ.ஆர்.டி.இன், இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது. அதில், இந்த மோசடியில்   பாதிக்கப்பட்ட இந்தியர்களின் விவரங்கள், இதில் பாதிப்பு ஏற்பட்ட தரவுகள் போன்றவற்றை அளிக்குமாறும் தாக்கு தல் நடத்திய வழிமுறைகள் மற்றும் அதற்கு டிவிட்டர் நிறுவனம் மேற் கொண்ட தீர்வு நடவடிக்கைள் குறித்தும் அரசு கேட்டுள்ளது.    மத்திய அரசின் இந்த நோட்டீஸ் குறித்து டிவிட்டர் நிறுவனம் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.