tamilnadu

img

கலால் வரி உயர்வு முட்டாள்தனமானது... சுப்பிரமணியசாமி கடும் சாடல்

புதுதில்லி:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தன.

ஆனால், குப்புறத் தள்ளியதோடு, குழியையும் பறித்த குதிரையின் கதையாக, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு மேலும் 3 ரூபாய் உயர்த்தி, மோடி அரசு அதிர்ச்சியை அளித்தது.இதற்கு எதிர்க்கட்சிகள் தற்போது கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாஜக எம்.பி.யும், அக்கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணியசாமியும் கலால் வரி உயர்வை கடுமையாக விமர்சித்துள்ளார். 

டுவிட்டர் பக்கத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, “பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டதற்கு, நிதியமைச்சரே பொதுமக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர். நான் இல்லை. குடியரசுத்தலைவர்தான் என்னை எம்.பி.யாக நியமித்துள்ளார். எனினும், பொருளாதார நிபுணராக இந்த விலை உயர்வு முட்டாள்தனமானது என்று கூறுவேன். ஏனெனில் பொருளாதார நீதி மற்றும் வளர்ச்சிக்கு பெட்ரோல் விலை ரூ. 40-ஐ தாண்டக் கூடாது” என்று கூறியுள்ளார்.
 

;