tamilnadu

img

ஐரோப்பிய யூனியன் தீர்மானம் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்... மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம்

புதுதில்லி:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்குஎதிராக, ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பது, ஒரு தவறான முன்னுதாரணம் என்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்றக்குழு தலைவருக்கு, ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார்.அதில் “ஒரு நாடாளுமன்றம் இன் னொரு நாடாளுமன்றத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்குவது பொருத்தமற்றது; இது நிச்சயமாக உங்கள் நலன்களுக்குஎதிராகவும் நாளை தவறாக பயன்படுத்தப்படலாம்” என்று எச்சரித்துள்ளார்.மேலும், குடியுரிமை திருத்தச் சட்டமானது, இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரிய ஆலோசனையுடன் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் “எங்களின் அண்டை நாடுகளால் மதத் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு எளிதாக குடியுரிமை வழங்க இந்தச் சட்டம் வகை செய்கிறது; இது யாரிடமிருந்தும் குடியுரிமையைப் பறிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், “வழக்கமான நடைமுறைகளின்படி, வரைவுத் தீர்மானங்களை மட்டுமே ஐரோப்பிய நாடாளுமன்றம் வெளியிட்டது. இந்த அறிக்கைகள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பல்வேறு அரசியல் குழுக்களால்தாக்கல் செய்யப்பட்ட வரைவுகள் மட் டுமே என்பதை நினைவில் கொள்வது அவசியம்” என்று, ஐரோப்பிய யூனியனின் வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் வெர்ஜினே பட்டு ஹென்ரிக்சான் பதிலளித்துள்ளார்.“ ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினர்கள் வெளிப் படுத்திய கருத்துக்கள் ஐரோப்பிய கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

;