tamilnadu

தமிழகத்தில் காலியாகும் 6 இடத்திற்கு விரைவில் தேர்தல்?

புதுதில்லி, ஜுன் 6-தமிழகத்தில் கனிமொழி (திமுக), கே.ஆர்.அர்ஜுனன், ஆர்.லட்சுமணன், வி.மைத்ரேயன், டி.ரத்ன வேல் (அதிமுக), டி.ராஜா (சிபிஐ) ஆகிய 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது. ஆகவே அடுத்த மாதம் 24-ம் தேதிக்குள் 6 புதியமாநிலங்களவை உறுப்பினர் கள் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் இதற்காக தேர்தல் நடத்த உயர்மட்ட ஆலோசனைகள் நடந் திருப்பதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவிலேயே தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப் படும் எனத் தெரிகிறது.