tamilnadu

img

இஐஏ - 2020 பேரழிவை ஏற்படுத்தக் கூடியது... அரசியல் சித்தாந்தங்களைத் தாண்டி அனைவரும் எதிர்க்க வேண்டும்: ராகுல் அழைப்பு

புதுதில்லி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ளசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (வரைவு)அறிவிக்கை-2020 மிகவும் ஆபத்தானது; பேரழிவை ஏற்படுத்தக்கூடியது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அரசியல் சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் அனைவரும்ஒன்றுபட்டு இதனை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்துள்ளசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு (Environment Impact Assessment-EIA-2020) நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன்மீது ஆகஸ்ட் 11 வரை, மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என மோடி அரசு கூறியுள்ள நிலையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின் ஆபத்து குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தில் விரிவான பதிவுஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு(EIA-2020)  வரைவு அறிக்கையைஏற்றுக்கொள்ள முடியாது என்பதுமட்டுமல்ல, இந்த அறிக்கையேமிகவும் ஆபத்தானது. சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்காக- பல ஆண்டுகளாக நடந்த போரில் நாம்பெற்ற வெற்றிகள், பல கடினமானபோராட்டங்களால் பெற்ற பலன் களை பின்னோக்கி இழுத்து, நாடுமுழுவதும், பரவலான சுற்றுச்சூழல்அழிவைக் கட்டவிழ்த்து விடக்கூடியது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளான நிலக்கரிச் சுரங்கம் மற்றும் பிற சுரங்கப் பணிகளுக்கு இனிமேல் சுற்றுச்சூழல் தாக்கமதிப்பீடு அறிக்கையே தேவைப் படாது என்ற நிலையை அறிக்கை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல், நெடுஞ்சாலை, ரயில்வேஇருப்புப்பாதைகள் அடர்ந்த வனப் பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் சென்றால், எந்தக் கேள்வியுமின்றி, ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிச் சாய்ப்பார்கள். அழிவில் விளிம்பில் இருக்கும் ஆயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிக் கப்படும்.சுற்றுச்சூழல் தாக்க வரைவு மதிப்பீடு அறிக்கைக்குப் பின் பயங்கரமான உண்மை ஒன்று இருக்கிறது. அது சுற்றுச்சூழல் சீரழிவால் நேரடியாகப் பாதிக்கப்படும் மக்களின், சமூகத்தினரின் குரலை மவுனமாக்க முயல்கிறது. எனவே, ஒவ்வொரு இந்தியரும் சுற்றுச்சூழல் தாக்க வரைவுமதிப்பீட்டுக்கு எதிராக குரல் கொடுத்துப் போராட வேண்டும். சுற்றுச்சூழலைக் காக்க நமது இளைஞர்கள் எப்போதும் முன்களத்தில் நின்று போராடக்கூடியவர்கள். அவர்கள், அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியானநம்பிக்கைகளைக் கடந்து இப்பிரச்சனையைக் கையில் எடுத்து போராடவேண்டும்.

சுற்றுச்சூழல் என்பது சுருக்கமான சாதாரண வார்த்தை அல்ல, அது மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதார விஷயம்.மத்திய அரசின் அறிவிக்கையை அனுமதித்தால், அது பரவலாக நீண்டகாலத்தில் சுற்றுச்சூழலில் பேரழிவுகளை நமக்கும், நமது சந்ததியினருக்கும் ஏற்படுத்தும்.இவ்வாறு ராகுல் காந்தி குறிப் பிட்டுள்ளார்.

;