tamilnadu

img

டாக்டர் இலினா சென் மறைவு: ஜனநாயக மாதர் சங்கம் அஞ்சலி

புதுதில்லி, ஆக.11- கொல்கத்தாவில், மாதர் சங்கத்தின் முன்னணி ஊழியரும், கல்வியாளருமான டாக்டர் இலினா சென் மரணம் அடைந்திருப்ப தற்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரி வித்திருக்கிறது. டாக்டர் இலினா சென், கடந்த பல ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தன் ஆழ்ந்த இரங்கல்களை அவருடைய வாழ்க்கைத் துணைவர் டாக்டர் பினாயக் சென், மகள்கள் பிரனிதா, அபாரஜிதா ஆகியோருக்கும் தெரிவித்துள்ளது. டாக்டர் இலினா சென், பொது சுகாதார இயக்கத்தின் முன்னோடித் தலைவர் களில் ஒருவர். அவர் சத்தீஸ்கரில் பல தொழிற்சங்கங்களுடன் பழங்குடியினர் மத்தியில்  பல ஆண்டுகள் பணியாற்றினார். டாக்டர் இலினா, மத்திய இந்தியாவில் பழங்குடியினர் பகுதிகளில் சுகாதாரப் பாது காப்பு தொடர்பாக ஏற்படும் பிரச்சனை களைக் களைவதற்காக வேலை செய்து வந்தார். இவரும் இவருடைய துணைவர் டாக்டர் பினாயக் சென்னும் இணைந்து உருவாக்கிய அரசு சாரா நிறுவனமான ருபந்தார், பாலினப் பிரச்சனைகள் மற்றும்  வேளாண்பல்லுயிர் பிரச்சனைகள் குறித்தும் கவனம் செலுத்தி வந்தது.

டாக்டர் பினாயக் சென் 2007இல் கைது செய்யப்பட்டபோது அவரை விடுவிப்பதற்கான சட்டப் போராட்டத்தில் டாக்டர் இலினா ஈடுபட்டார். அதேபோன்று மத்திய இந்தியாவில் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்ட பழங்குடியின இளைஞர்களை விடுவிப்பதற்காகவும் அவர் பிரச்சாரம் செய்து வந்தார். டாக்டர் இலினா, சத்தீஸ்கரில் நடந்துவந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களைச் செய்து வந்தார். பழங்குடியின மக்கள் மத்தியில் நடைபெற்ற போராட்டங்களை விவரித்து டாக்டர்  இலினா எண்ணற்ற புத்தகங்கள் எழுதியிரு க்கிறார். அவர் எழுதியுள்ள போராட்டத்திற் குள் காலியிடம் (A Space Within the Struggle) என்னும் புத்தகத்தில் சமூக இயக்க ங்களில் ஈடுபட்ட பெண் வீராங்கனைகள் பலரைக் குறித்து எழுதியிருப்பதுடன் அவர்கள் ஆணாதிக்கத்திற்கு எதிராகப் போராடிய வரலாறுகளையும் பதிவு செய்திருக்கிறார். டாக்டர் இலினா உடல் நலிவடைந்த நிலையிலும் எண்ணற்ற மக்கள் இயக்கங்களு டன் தன்னை இணைத்துக்கொண்டிருந்தார். அவர் வெகுகாலம் சிவில் உரிமைகளுக்கான மக்கள் யூனியனுடன் (PUCL-People’s Union for Civil Liberties) தன்னைப் பிணைத்துக் கொண்டிருந்தார்.  அவர் நாட்டில் மனித உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள் கைது செய்வதை ஆட்சேபித்து ஓங்கி குரல்கொடுத்து வந்தார். இவ்வாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளது. (ந.நி.)

;