tamilnadu

img

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

புதுதில்லி:
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லாவை விடுதலை செய்யக்கோரி வெள்ளியன்று நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான  சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய பாஜக அரசு அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்து சிதைத்தது. மேலும் அரசியல் கட்சித் தலைவர்களையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்  பரூக் அப்துல்லா, பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  பரூக் அப்துல்லாவை விடுதலை செய்யக்கோரி வெள்ளியன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள  காந்தி சிலை முன்பு திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.