tamilnadu

img

டிஜிட்டல் ஏற்றத்தாழ்வு... நாட்டின் புதிய பிரச்சனை... ஆன்லைன் வகுப்புகளால் ஏழை மாணவர்கள் பாதிப்பு...

புதுதில்லி:
நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களாக பள்ளிகள் மூடிக் கிடக்கும் நிலையில், மாணவர்களுக்கு தற்போது ஸ்மார்ட் போன் மற்றும் கம்ப்யூட்டர் வழியாக ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தப் பட்டு வருகின்றன.ஆனால், ஸ்மார்ட் போன் வசதியில்லாத ஏழை மாணவர்கள் இந்த வகுப்புக்களில் கலந்துகொள்ள முடியாமல் கல்விக்குவெளியே நிறுத்தப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பான விவாதங் கள் தற்போது முன்னுக்கு வந் துள்ள நிலையில், நாட்டில் பல்வேறு பொருளாதார ஏற்றழ் தாழ்வுகளுக்கு இடையே ஆன்லைன் வகுப்புகளால் ‘டிஜிட்டல் ஏற்றத்தாழ்வு’ ஒரு புதியபிரச்சனையாக உருவெடுத் துள்ளது என்று தேசியப் புள்ளியியல் அமைப்பு கூறியுள்ளது.இந்த டிஜிட்டல் இடைவெளி பெரிய அளவில் ஏழை மாணவர்களின் கல்வியில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் அது கவலை தெரிவித்துள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தின் நகரப்பகுதிகளில் இண்டெர் நெட் இணைப்பு 70 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளது. ஒடிசாவில் 6 சதவிகிதத்திற்கும் கீழ்தான் டிஜிட்டல் வசதி உள்ளது.இந்தியா முழுவதும் 10 வீடுகளுக்கு ஒரு வீடு என்ற அளவிலேயே கணினி உள்ளது. அவர்களிலும் 25 பேருக்கு மட்டுமேஇண்டெர்நெட் வசதி உள்ளது.கிராமப்புறங்களில் 15 சதவிகிதம் மக்களிடம்தான் இண்டெர் நெட் உள்ளது.தலைநகர் தில்லியில் 55 சதவிகித வீடுகளில் இணையஇணைப்பு வசதி இருப்பதுதான் இருப்பதிலேயே அதிகபட்சம். அதற்கு அடுத்தபடியாக இமாச்சல், கேரளா ஆகிய மாநிலங்களில் 50 சதவிகிதத்திற்கு சற்றுகூடுதலான வீடுகளில் இணையஇணைப்பு வசதி உள்ளது. மாறாகஒடிசாவில் 10 வீடுகளுக்கு ஒருவீட்டில்தான் இணைய இணைப்பு உள்ளது. கர்நாடகா,தமிழ்நாடு உள்ளிட்ட10 மாநிலங்களிலும் கூட 20 சதவிகிதத் திற்கும் குறைவாகவே இண்டெர் நெட் இணைப்பு உள்ளதுஎன்று புள்ளியியல் அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

;