இரண்டு மாத காலமாக நீடிக்கும் இந்தியாவின் ஊரடங்கு உலகின் மிகப்பெரிய, மிகக்கொடிய நிகழ்வாக மாறிப்போயிருக்கிறது. 120லட்சம் மக்கள் கொடிய வறுமையின் பிடியில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக ஏராளமான விபரங்கள் வெளிவந்துவிட்டன. புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு வாய் உணவுக்கும், குடிநீருக்கும் வழியில்லாமல் அல்லாடுகிறார்கள். மத்தியப்பிரதேசத்திலிருந்து உத்தரப்பிரதேசத்திற்கு புலம்பெயர்ந்து வந்த தொழி லாளர்கள், மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்புவதற்காக பிரயாக்ராஜ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளில் ஏறுவதற்கு முன்பு அவர்களுக்கு உணவு என்ற பெயரில் வழங்கப் பட்ட ஒற்றை வாழைப்பழத்திற்காக உயிரைப் பணயம் வைத்து முண்டி மோதுகிற காட்சிகளும் மனிதர்களை மனிதர்களாக மதிக்காமல் அந்த வாழைப்பழத்தையும் கூட தூக்கியெறிகிற அதிகார வர்க்கத்தின் மனிதத்தன்மையற்ற செயலும் அதிர்ச்சியை அளிக்கிறது. நரேந்திர மோடியின் எந்தத் திட்டமிடலும் இல்லாத, கடைசி நிமிடத்தில் தன்னிச்சையாக ஒரு உத்தரவு போல பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை, எப்படி முடிப்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள். ஊரடங்கை முடித்து வைக்க அறிவியல்பூர்வ மான வழிகளைப் பின்பற்ற அவர்களுக்கு தெரியவில்லை. இதன் விளைவாக நாட்டின் பொது சுகாதாரம் மீள முடியாத ஒரு துயரகரமான நெருக்கடி நிலைக்குள் ஆழ்த்தப்பட்டிருக்கிறது.
குஜராத் மருத்துவமனைகளில் கொரோனா அச்சத்துடன் பலர் அனுமதிக்கப்பட்டிருக் கிறார்கள். அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையிலும் கூட பலருக்கு இன்னும் சோதனை செய்யப்படவில்லை. அரசு மருத்துவ மனைகளில் எந்த ஏற்பாடுகளும் இல்லாததால் பலர் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளிலும் சேர்ந்திருக்கிறார்கள். ‘அகமதாபாத் மிரர்’ எனும் பத்திரிகை சந்திரிகா சவதா (53), விஜய் ஷா (62), சாந்தா பென் ஷா (92), பிரக்னேஷ் ஷா (62), பிரிதேஷ் படேல்(49) ஆகிய ஆறு நோயாளிகளின் புகைப் படங் களை வெளியிட்டு, அன்புக்குரிய அரசே, இவர்களுக்கு எப்போது பரிசோதனை செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பி, குஜராத்தில் பரிசோதனை எதுவும் செய்யப்படாமல் அங்கு பெரியள வில் பாதிப்பு இல்லை என்ற தோற்றத்தைக் காட்டுவதற்காக மாநில பாஜக அரசு மேற் கொண்டிருக்கிற அற்பத்தனமான முயற்சிகளை விமர்சித்து விரி வாக எழுதப்பட்டிருக்கிறது. இது தான் குஜராத் மாடல் போலும். எந்த சோதனையும் செய்யாமல், கொரோனா பரவிக்கொண்டிருக் கிறது. மனிதர்களின் உயிர் களுக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. மனிதத்தன்மையற்ற இந்த நிகழ்வுகளை மறைத்து எல்லாம் நலமே என்று குஜராத் அரசு பொய்களை பரப்பிக் கொண்டிருக்கிறது.
https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury