tamilnadu

img

சிபிஎம்தான் முக்கிய எதிரி; பாஜக அல்ல... கேரளா முஸ்லீம்லீக் தலைவர் குஞ்ஞாலிக்குட்டி சொல்கிறார்

கொச்சி:
கேரளத்தில் பாஜக அல்ல, சிபிஎம்தான் தங்களதுமுக்கிய எதிரி என முஸ்லீம்லீக் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.கே.குஞ்ஞாலிக்குட்டி தெரிவித்துள்ளார். கட்சி ஊழியர்களுக்கு என தயாரிக்கப்பட்ட வீடியோவில் இதை அவர் அறிவித்துள்ளார். 
ஒரு தேர்தலில்கூட எல்டிஎப் வெற்றி பெறக்கூடாது. அப்படி நடந்தால் அது யுடிஎப்புக்கும் முஸ்லீம்லீகிற்கும் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்; நிலைநிற்புக்கே பாதிப்பாகிவிடும் என குஞ்ஞாலிக்குட்டி அந்தவீடியோவில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, தீவரவாத அமைப்புகளுடன் முஸ்லீம்லீக் தேர்தல் உடன்பாடு கொள்ள முடிவு செய்தது விவாதமானது. தங்க கடத்தல் வழக்கில் மத்திய வெளியுறவுத்துறை துணைஅமைச்சர் வி.முரளீதரனையோ, பாஜக ஆதரவு ஜனம் டிவியின் ஒருங்கிணைப்பு ஆசிரியர் அனில் நம்பியாரையோ லீக் விமரிசிக்காமல் இருப்பதும் விவாதமாகி உள்ளது.  தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கே.டி.ரமீஸ், குஞ்ஞாலிக்கட்டியின் பேரன் என்பதும்,அவருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில் அவருக்கு ஜாமீன்கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தங்க கடத்தல் பின்னணியில் தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு திரும்பியுள்ள நிலையில்பாஜக முக்கிய எதிரி அல்ல என்கிறார் குஞ்ஞாலிக்குட்டி. கேரள அரசுக்கு எதிராக யுடிஎப்பும் பாஜகவும் ஒரேகுரலில் பேசுவதும், வன்முறைகள் நடத்தி வருவதும் இந்த கள்ள உறவின் வெளிப்பாடாகவே கேரள மக்கள் பார்க்கின்றனர்.

;