தோனிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளதால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
2020 ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த சீசன் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க பிசிசிஐ பல்வேறு விதிமுறைகளுடன் ஐபிஎல் தொடரை நடத்த உள்ளது.
கொரோனோ பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வரும் பட்சத்தில் திட்டமிட்டபடி நாளை தோனி சென்னை வரவுள்ளார். தோனியுடன் சேர்ந்து மற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுடன் சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.