tamilnadu

img

இருமல், காய்ச்சலுடன் யார் வந்தாலும் கொரோனா சோதனை

புதுதில்லி, மார்ச் 21- சாதாரண இருமல், காய்ச்சலுடன் யார் அனுமதிக்கப்பட்டாலும் மருத் துவமனைகளில் அவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப் படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோய் உல கம் முழுவதும் வேகமாக பரவி அச்சு றுத்தி வருகிறது.இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 258 பேராக அதிகரித்துள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத் திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இருமல், காய்ச்ச லுடன் மருத்துவமனைகளில் யார் அனுமதிக்கப்பட்டாலும் அவர் களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். கடந்த 14 நாட்களில் வெளிநாட்டில் இருந்து வந்த அனை வருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் கொரோனா தொற்று நோயாளிகளுடன் நெருங்கி பழகி யவர்களுக்கு ஐந்தாம் நாளில் இருந்து 14 ஆம் நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்யப் படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

;