தில்லி, ஜூன் 8- தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லேசான காய்ச் சல், இருமல் உள்ளது. இதை யடுத்து அவர் தன்னைத் தனி மைப்படுத்திக் கொண்டார்; மேலும் அவர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று கட்சி செய்தித் தொடர்பாளர் தெரி வித்துள்ளார். செவ்வாய்கிழமை அவருக்கு பரிசோதனை நடத் தப்படும் என தகவல் வெளியாகி யுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக 9,000 க்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,56,611 ஆக உள் ளது. பாதிக்கப்பட்ட 2.56 லட்சம் பேரில் 1,25,381 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,24,094 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இறந்த வர்களின் எண்ணிக்கை 7,000 ஐத் தாண்டி 7135 ஆக உள்ளது. நாட்டின் மிக மோசமான கொரோனா பாதிப்பு மாநிலமாக மாறியுள்ள மகாராஷ்டிராவில் இப்போது சீனா வை விட அதிகமான பாதிப்பு ஏற் பட்டுள்ளது. சீனாவில் பாதிக்கப் பட்ட 84,191 பேருடன் ஒப்பிடும் போது மகாராஷ்டிராவில் 85,975 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தில்லியில் 28,936 பேர் தொற் றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,125 பேர் சிகிச்சையில் உள்ளனர். 10,999 பேர் குணமடைந்துள்ளனர். 812 பேர் உயிரிழந்துள்ளனர்.