tamilnadu

img

கொரோனா பாதிப்பு இந்தியாவில் 19 ஆயிரத்தை நெருங்குகிறது.... பலி எண்ணிக்கை 600-ஐ தாண்டியது

புதுதில்லி:
இந்தியாவில் செவ்வாய்க்கிழமை மாலை ஐந்து மணி நிலவரப்படி 18,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,260 பேர் குணமடைந்துள்ளனர். 603 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் மாஹே, கர்நாடகாவின் குடகு மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக புதிய தொற்று எதுவும் இல்லை என்றும், மேலும் 54 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 2547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதே போல் அருணாச்சல மாநிலம் கொரோனா தொற்றில்லா மாநிலமாக மாறியுள்ளது
அதிபட்சமாக மகாராஷ்டிராவில் 4,669 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 232 ஆக அதிகரித்துள்ளது.

தில்லியில் 2,081 பேரும், குஜராத்தில் 2,061 பேரும், இராஜஸ்தானில் 1,576 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் 1,520 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 1,540 பேரும்,  உத்தரப்பிரதேசத்தில் 1,294 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஆயிரம் எண்ணிக்கையை தாண்டிய பட்டியலில் ஏழு மாநிலங்கள் உள்ளன. ஆயிரத்தை நெருங்கும்  மாநிலங்களில் அடுத்த இடத்தில் தெலுங்கானா உள்ளது. இங்கு 919 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

;