tamilnadu

img

கொரோனா தொற்று... உ.பி. மாநில அமைச்சர் பலி... 

லக்னோ 
நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தர பிரதேசத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஆனால் அம்மாநில அரசோ கொரோனா பரவலை பற்றி கண்டுகொள்ளாமல் ராமர் கோயில் பூமி பூஜை தொடர்பான விஷயங்களில் பிசியாக உள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் 85,461 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,630 பேர் பலியாகியுள்ள நிலையில், 48,863 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் தொழிநுட்ப கல்வி அமைச்சராக இருப்பவர் கமலா ராணி வருண் (62). முன்னாள் எம்.பி-யான (மக்களவை) இவருக்கு சிலநாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக கொரோனா தாக்குதலில் கமலாவின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் வென்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை பெற்று வந்த கமலா ராணி இன்று உயிரிழந்தார். அவரது உடல் பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊரான கான்பூருக்கு கொண்டு செல்லப்பட்டது.நாட்டில் பல எம்எல்ஏ, எம்பி-களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் சில அமைச்சர்கள் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆனால் மாநில அமைச்சர் ஒருவர் கொரோனா நோயால் உயிரிழந்திருப்பது இதுவே முதல்முறையாகும். 

;