tamilnadu

img

அநாகரிக பேச்சைக் கட்டுப்படுத்துங்கள்!

170 பெண் ஆளுமைகள் மோடிக்கு கடிதம்!

புதுதில்லி, பிப்.6- தில்லி சட்டப்பேரவைத் தேர்த லில், பாஜக-வினர் செய்த மிகமோச மான மற்றும் அருவருக்கத்தக்க பிரச் சாரம் குறித்து, பல்வேறு துறையைச் சேர்ந்த பெண் ஆளுமைகள் 170 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். பொருளாதார நிபுணர் தேவகி ஜெயின், முன்னாள் வெளிநாட்டு தூதர் கள் மதுபாதுரி, நவ்ரேகா சர்மா, பேரா சிரியர் சோயா ஹசன், வரலாற்று ஆய்வாளர் உமா சக்கரவர்த்தி, திட்டக் குழு முன்னாள் உறுப்பினர் சைதா ஹமீது உள்ளிட்டோர் கையெழுத்திட் டுள்ள, அந்த கடிதத்தில் கூறப்பட்டி ருப்பதாவது: பிரதமராகிய நீங்கள் அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பது அரசியல் சட்ட ரீதியான கட மையாகும். இந்த நிலையில் நீங்க ளும், உங்களது கட்சியும் அரசியல் சாசன சட்ட விதிகளுக்கு உட்பட்டு தேர் தலை சந்திக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் பெண்களுக்கு பயத்தை யும், பாதுகாப்பின்மையையும் அதி கரிக்கும் வகையில் செயல்பட வேண்டாம்.

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அனுராக் தாக்குர், உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா ஆகியோரின் பேச்சுக்கள் வெறுக்கத்தக்க வகையில் உள்ளன. நாங்கள் இந்துவாக, முஸ்லிமாக, கிறிஸ்தவர்களாக, சீக்கியர்களாக, ஆதிவாசிகளாக, தலித்துகளாக இருக்கலாம். இந்த நாட்டின் பெண் கள் என்ற வகையிலும், தில்லியில் வசிப்பவர்கள் என்ற வகையிலும் நாங்கள் உங்களிடம் சொல்கிறோம்.  பிரதமராகிய நீங்கள் பாஜக-வைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால், நாட்டின் பிரதமர் என்ற வகையில் அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டியது அரசியல் சாசன ரீதி யிலான உரிமையாகும். இது போன்ற வெறுக்கத்தக்க வன்முறையை உருவாக்கும் பேச்சுகளுக்கு எதிராக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.

தேசிய குடியுரிமைச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு போன்ற வற்றை எதிர்த்து, நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டம் நடந்து வருகிறது. உங்கள் அரசு இதை ஏற்றுக்கொள் ளாமல் இருக்கலாம். ஆனாலும், அமைதியாக போராட்டம் நடத்துவது என்பது அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் உரிமை. அதன்படியே நாங்கள் போராடுகிறோம். லட்சக்கணக்கான தில்லி பெண்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுக்கிறார்கள். பெண்கள் ஆளுமையை வெளிக்காட்டும் வகையில் முன்னணியில் இருந்தும் போராடுகிறார்கள். ஆனால், எங்களைத் தீவிரவாதி கள், துரோகிகள் என்று முத்திரை குத்தினால், நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. அரசியல் சாச னம் அளித்துள்ள உரிமையின் அடிப்ப டையில்தான் நாங்கள் போராடுகி றோம். இவ்வாறு அந்த பெண் ஆளுமை கள் கூறியுள்ளனர்.