tamilnadu

img

மத்திய - மாநில அரசுகளின் கடன் ஜிடிபியில் 91 சதவிகிதம்! கடனில் மூழ்கும் இந்தியப் பொருளாதாரம்!

புதுதில்லி, ஆக.27- இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடன் நிலை மிக வும் மோசமாக இருப்பதாகவும், 2021-22 நிதியாண்டில், இந்தியா வின் ஜிடிபி-யில் 91.3 சதவிகித மாக கடன் மதிப்பு அதிகரிக்கும் என்றும் ‘மோதிலால் ஓஸ்வால்’ (Motilal Oswal) என்ற நிதிச் சேவை நிறுவனம் கூறியுள்ளது. இதுதொடர்பாக ‘மோதிலால் ஓஸ்வால்’ நிறுவனம் மேலும் தனது அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கடந்த 2017 - 18 நிதியாண்டில், மத்திய - மாநில அரசுகளின் கடன் அளவு, இந்தியாவின் ஒட்டு மொத்த ஜிடிபி மதிப்பில் (Debt to GDP Ratio) 70 சதவிகிதமாக இருந்தது. இது 2019 - 20 நிதி யாண்டில் 75 சதவிகிதமாக உயர்ந் துள்ளது. மேலும் 2021 - 22 நிதி யாண்டில் இது 91.3 சதவிகிதமாக அதிகரிக்கும். இந்திய அரசு, ஜிடிபி அடிப் படையிலான தனது கடன் விகி தத்தை (Debt to GDP Ratio), 2024 - 25 நிதியாண்டிற்குள் 60 சத விகிதமாகக் குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து இருந் தது. ஆனால், தற்போது இந்தியா வில் இருக்கும் அரசாங்கங்கள் வாங்கி இருக்கும் கடனை கணக் கில் எடுத்துக் கொண்டால், மேலே சொன்ன இலக்கை அடைய இன் னும் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். ஒரு நாட்டின் ஜிடிபி அடிப்ப டையிலான கடன் விகிதம் தொட ர்ந்து 77 சதவிகிதத்துக்கு மேல் நீண்ட நாட்களுக்கு இருந்தால், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடையும் என்பது உலக வங்கியின் மதிப்பீடு ஆகும்.  அந்த வகையில் பார்க்கை யில், தொடர்ந்து 77 சதவிகி தத்திற்கும் அதிகமான கடன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் கடுமையாக பாதிக்கலாம். குறிப்பாக, அடுத்த பத்தாண்டுகளில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5 முதல் 6 சத விகித அளவைத் தாண்டுவதற்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு ‘மோதிலால் ஓஸ்வால்’ கூறியுள்ளது.

நாடு பின்னடைவிலிருந்து மீள நீண்ட காலமாகும்.. ஆர்பிஐ அறிக்கை ஒப்புதல்
இந்தியாவில் கடுமையான பொருளாதார மந்தம் நிலவுவதை செவ்வா யன்று வெளியான ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது. நடப்பு ஆகஸ்ட் பிற்பாதியில் இந்தியாவின் ஜிடிபி மைனஸ் 12 சதவிகித மாக வீழ்ச்சியடையும் என்றும் பொருளாதார மீட்சிக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். போக்குவரத்து, விருந்தோம்பல், பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. நகர்ப்புற நுகர்வில் பெரும் அடி விழுந்துள்ளது. நாட்டின் சில்லரைப் பணவீக்கம் 6.93 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் இந்தியப் பொருளாதாரம் சந்திக்கும் பிரச்சனைகளை அடுக்கியுள்ளார்.


 

;