இப்போது வாக்களித்து வெற்றிபெறச் செய்தால், இலவச தடுப்பூசி என்றால்,
ஏற்கெனவே வெற்றிபெற்று ஆட்சியிலிருக்கிற இடங்களுக்கு?
ஏற்கெனவே இந்தியாவில் இவர்களது ஆட்சிதானே நடக்கிறது?
இப்போது சொல்கிற வாக்குறுதி உண்மையென்றால், இந்தியா முழுவதற்கும் இலவசத் தடுப்பூசி அளிக்க வேண்டாமா?
இந்தியாவிற்குள்தானே பீகார் உள்ளது?
தேர்தல் அறிக்கையை வெளியிட்டவரே மத்திய நிதியமைச்சர்தான்...
ஏற்கெனவே, இந்தியாவுக்கே நிதியமைச்சராக இருக்கிற இவர்,
அந்த இந்தியாவுக்கே இலவச தடுப்பூசி என்று அறிவிக்காமல்
பீகார் தேர்தலில் வாக்களித்தால் இலவச தடுப்பூசி என்று அறிவிப்பது,
வாக்களிப்பதற்கான லஞ்சம் அல்லாமல் வேறென்ன?
என்னவாயிருந்தாலும் குதிரைக்கு முன்னால் தொங்கும் கொள்ளுப் பைதான்!
வாக்குறுதிகளை நிறைவேற்றிய வரலாறே இவர்களிடம் இல்லை!
தேர்தல் ஜூம்லா என்று சொல்லிக் கொள்ளலாம்!
==-அறிவுக்கடல்==