tamilnadu

img

பஸ்வானின் பேச்சால் பீகாரில் பாஜக கூட்டணி உடையும் அபாயம்.... 

பாட்னா 
பீகாரில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேசிய மற்றும் மாநில கட்சிகள் அங்கு தீவிரமாக பணியாற்றி வருகின்றன. மாநிலத்தை ஆளும் ஐக்கிய ஜனதாதள - பாஜக கூட்டணி கட்சிகள் தனது வழக்கமான செயலான எதிர்கட்சித் தலைவர்களை விலைக்கு செயலில் மும்முரமாக உள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதாதள  கட்சியின் முக்கிய தலைவர்களை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வந்துள்ளது. 2 நாட்களுக்கு முன் கொரோனா வார்டில் இருந்த ஆர்ஜேடி மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரசாத் சிங்கை ஐக்கிய ஜனதாதளம் தனது கட்சிக்குள் தூக்கிட்டு வந்தது.

இந்நிலையில், பிரச்சனை இல்லாமல் இருந்த நிதிஷ் குமார் - பாஜக கூட்டணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய வகிக்கும் பீகாரின் பிரதான கட்சியான மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜன சக்தி கூட்டணிக்குள் புதிய சிக்கலை உருவாகியுள்ளது. ராம்விலாஸ் பஸ்வான் வழக்கமாக தான் கேட்கும் தொகுதிகளை வழங்காவிட்டால் எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் விலகுவதாக கூறுவார். பின்னர் சமரச முயற்சியில் போதியளவு சீட் கிடைத்தவுடன் மீண்டும் பாஜகவுடன் சேருவார்.இது வழக்கமான செய்தி என்றாலும், இம்முறை பாஜக கட்சிக்கு வித்தியாசமான முறையில் செக் வைத்துள்ளார். 

உடல்நலக்குறைவால் ராம்விலாஸ் பஸ்வான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கூட்டணி குறித்து அதிரடி தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதில்,"பீகார் மாநிலத்தில் கூட்டணி குறித்து என் மகன் சிராக் பஸ்வான் என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன்’’ என பஸ்வான் தெரிவித்துள்ளார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில்,"எனது மகன் சிராக்கின் இளம் சிந்தனைகள் பீகாரையும், கட்சியையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு’’ எனவும் குறிப்பிட்டுள்ளார். 

சிராக் பஸ்வானின் சிந்தனை, கொள்கை, செயல்பாடு இன்னும் இந்திய அரசியல் துறைக்கு பழக்கம் இல்லை என்பதால் பாஜக உடனான கூட்டணி குறித்து என்ன அவர் எடுக்கும் முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்.  

;