வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் தர மறுக்கின்றன என செய்திகள் வருகின்றன. அடுத்த நடவு தொடங்கும் காலம் இது! விவ சாயிகளுக்கு விதைகளும் உரமும் உடனடியாக தரப்பட வேண்டும். அவர்களின் கடன் இரத்து செய்யப் பட வேண்டும். கூட்டு களவாணி முதலாளிகளுக்கு கோடிக்கணக் கான ரூபாய்கள் கடன் ரத்து! ஆனால் நமக்கு அன்னமிடும் கைகளுக்கு வெற்று வாக்குறுதிகள்!
பிரதமர் மற்றும் ஆளும் அர சியல்வாதிகள் பயணிக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு பி777 விமானங்கள் செப்டம்பர் மாதத்தில் அரசாங்கத்தி டம் அளிக்கப்படும் என பி.டி.ஐ. செய்தி தெரிவிக்கிறது. விவசாயிகளுக்கு/தொழிலாளர்களுக்கு/ இடம் பெயர் உழைப்பாளிகளுக்கு எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை. ஆனால் மக்களின் வரிப்பணத்தி லிருந்து இந்த இக்கட்டான நேரத் திலும் ரூ. 8458 கோடி செலவில் விமானங்கள் வாங்குவது நியாயம் தான் என மோடி அரசாங்கம் நினைக் கிறது. தனது சொந்த பயணத்திற்கு அந்நிய விமானங்கள்! மக்களுக்கு “ஆத்மநிர்பார்’’ அதாவது சுயச்சார்பு வெற்று முழக்கம்!
தோழர்;
செவ்வணக்கம்;
லெனின் - இந்த வார்த்தைகளைப் பேசியதற்காக அல்லது எழுதி யதற்காக அல்லது படித்ததற்காக தேசிய புலனாய்வு முகமை “தேசத் துரோகம்” சட்டத்தின் கீழ் மற்றும் உபா எனும் ஆள்தூக்கி சட்டத்தின் கீழும் குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்து உள்ளது. 1930 ஜனவரி 21 அன்று லாகூர் சதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மாவீரன் பகத்சிங், நீதிமன்றத்தில் குற்ற வாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட சமயத்தில், அங்கு நீதிபதி வந்து அமர்ந்தவுடன் சோசலிசப் புரட்சி நீடு வாழ்க, கம்யூனிஸ்ட் அகிலம் நீடு வாழ்க, லெனின் பெயர் ஒரு போதும் மறையாது, ஏகாதிபத்தியம் ஒழிக என்று பெரும் முழக்கம் எழுப்பி னார். அந்த முழக்கத்தை நீதிமன்றத் திற்கு வெளியே நாடெங்கிலும் கோடிக் கணக்கான மக்கள் எதிரொலித்த னர். இன்றைக்கும் இது குற்றம் எனில் அந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்வோம்! மீண்டும் உரக்க முழுக்கம் செய்கிறோம்: புரட்சி ஓங்குக! புரட்சி ஓங்குக!!.