tamilnadu

img

காங்.எம்எல்ஏக்களுடன் பேரம் பேசிய ஆடியோ வெளியீடு

ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் அரசை கவிழ்க்க சதியில் ஈடுபட்டதாக  துணை முதல்வர் சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகரிடம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ பன்வர் லால் சர்மாவிடம் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், பாஜக தலைவர் சஞ்சய் ஜெயின் ஆகியோர் பேரம் பேசியதாக ஆடியோ  வியாழனன்று வெளியானது. இதுதொடர்பாக ஜெய்ப்பூரில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பன்வர் லால் சர்மா, விஸ்வேந்தர சிங் ஆகியோரை காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மாநில அரசை கவிழ்க்கும் சதியில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் மீது வழக்கு பதிவு செய்து உடனே கைதுசெய்ய வேண்டும், அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம் வழங்க கருப்பு பணம் எங்கிருந்து வந்தது என விசாரிக்க வேண்டும் என்று  வலியுறுத்தினார்.

;