tamilnadu

img

மத்திய அரசு ஊழியர்கள் பணிக்கு வர ஆரோக்கிய செயலியை கேளுங்கள்.... மத்திய அரசு அறிவிப்பு

புதுதில்லி:
கொரோனா போரை எதிர்கொள்ள மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை உடனடியாக பதிவிறக்கம் செய்ய வேண்டும்.  செயலில் அதிக ஆபத்து எனக் காட்டினால் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்திக் கொள்ளவேண்டுமெனக் கேட்டுகொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா வைரசால் பாதித்தவர்களை கண்டறிய உதவும் ஆரோக்கிய சேது செயலியை மத்திய அரசு ஏப்ரலில் அறிமுகம் செய்தது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து இந்தச் செயலியில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த நிலையில் மத்திய அரசு அலுவலங்களில் பணிபுரியும் அனைவரும் தங்களது உடல்நிலை குறித்த தகவல்களை செயலியில் அலுவலகத்துக்கு செல்லும் முன் சரிபார்த்து கொள்ள வேண்டும். ஆரோக்கிய சேது செயலில் பாதுகாப்பு அல்லது குறைந்த ஆபத்து என்று இருந்தால் மட்டுமே அலுவலகத்துக்கு செல்ல வேண்டும்.

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "ஆரோக்கிய சேது செயலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் தற்போதைய தொடர்பு அடிப்படையில் ஊழியருக்கு நடுத்தர அல்லது அதிக ஆபத்து இருப்பதாக கணக்கிட்டுக் காட்டினால் அலுவலகம் வரக் கூடாது.  14 நாட்கள் அல்லது பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று மாறும் வரை சுய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும்". ஆரோக்கிய சேது செயலியை சரியாக பயன்படுத்தி கொரோனா தொற்றுப் பரவுவதைத் தடுக்க முடியும்.

இந்த உத்தரவு அனைத்து துறைகள், அமைச்சகங்கள், அமைச்சரவை செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
 

;