tamilnadu

img

ஒரு எம்.பி.யான, எனது புகாரையே தில்லி போலீஸ் கண்டுகொள்ளவில்லை... அகாலிதளம் எம்.பி. நரேஷ் குப்தா குற்றச்சாட்டு

புதுதில்லி:
வன்முறைக் கும்பலால் சூழப்பட்ட 16 முஸ்லிம்களைக் காப்பாற்றுமாறு, தானே தொலைபேசியில் அழைத்து முறையிட்டும், தில்லி போலீசார் அதனை அலட்சியப்படுத்திவிட்டதாக சிரோமணி அகாலிதளம் எம்.பி. நரேஷ் குஜ்ரால் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்நரேஷ் குஜ்ரால் கூறியிருப்பதாவது:பிப்ரவரி 26-ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணி இருக்கும். அப்போது, “மஜ்பூர் கோண்டா சவுக் அருகே தானும் 15முஸ்லிம்களும் ஒரு வீட்டில் சிக்கிக் கொண்டதாகவும் வீட்டை முற்றுகையிட்டு உடைத்து உள்ளே நுழைய ஒரு கும்பல் முயன்று வரும் நிலையில், தங்களைக் காப்பாற்றுங்கள்” என்றும் எனக்கு ஒருவர் அழைப்பு விடுத்தார்.

நான் உடனடியாக எண் ‘100’-க்கு தொடர்பு கொண்டு புகார் அளித்ததோடு என்னைத் தொலைபேசியில் அழைத்தவரின் எண்ணையும் போலீஸ் அதிகாரியிடம் அளித்தேன். சூழ்நிலையின் அவசரத்தை ஆபரேட்டரிடம் விளக்கி நான் ஒருஎம்.பி. என்பதையும் குறிப்பிட்டேன். 11.43மணியளவில் என்னுடைய புகார் பெறப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர். ஆனால், போலீசார் இந்தப் புகார் குறித்து எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதை அறிந்து, கடும் ஏமாற்றம் அடைந்தேன். அந்த வீட்டில் சிக்கிய 16 பேருக்கும் எந்த ஒரு உதவியும் போலீஸ் தரப்பில் அளிக்கப்படவில்லை. நல்வாய்ப்பாக, அந்த 16 பேரும் அருகில்வசிக்கும் இந்து நண்பர்கள் உதவியுடன் அதிர்ஷ்டவசமாக தப்பிச் சென்றுள்ளனர். ஒரு எம்.பி. அளித்த புகாருக்கே இதுதான்நிலை. எனவே, தில்லியின் சில பகுதிகள் எரிந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.இவ்வாறு நரேஷ் குஜ்ரால் கடிதத்தில் கூறியுள்ளார்.நரேஷ் குஜ்ரால், முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலின் மகன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

;