tamilnadu

img

ஜம்மு-காஷ்மீரில் குவிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் வாபஸ் இல்லை

உள்துறை அமைச்சகம் முடிவு

புதுதில்லி,ஜன.11- ஜம்மு-காஷ்மீரில் மார்ச் மாதம் முதல் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடைபெறலாம் என உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருப்பதாக காரணம் கூறி, அங்குள்ள கூடுதல்  பாதுகாப்புப் படைகளை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிடுவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கான  சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜக அரசு ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்து சிதைத்தது. ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப் பட்டுள்ளனர். மக்கள்  நடமாட்டத்துக்கும் தகவல் தொடர்பு சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.   அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வீட்டுக்காவலில்  வைக்கப்பட்டனர். மத்திய பாஜக அரசின் இத்தகைய அராஜக நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது.  இங்கு கூடுதலாக குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வீரர்க ளை திரும்பப் பெறுவதென மத்திய அரசு அண்மையில் முடிவு செய்தது. இந்நிலையில் மார்ச் முதல் மீண்டும் வன்முறைகள் நடை பெறலாம் என்றும், இதற்காக பாகிஸ்தான் எல்லை வழியாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள்  ஜம்மு-காஷ்மீர்,  ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில்  ஊடுருவ திட்டமிட்டிருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதையடுத்து காஷ்மீரில் குவிக்கப்பட்ட கூடுதல் வீரர்களை திரும்பப் பெறும் முடிவை கைவிட மத்திய உள்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளது.  
 

;