tamilnadu

img

கீழடி அகழாய்வுப் பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்திடுக!

மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புதுதில்லி, செப். 23- கீழடியில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்  என மத்திய கலாச்சாரம் மற்றும்  சுற்றுலாத்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) பிரகலாத் சிங் பாட்டீலை நேரில் சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அச்சமயத்தில், இந்தக் கோரிக்கை யை வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் அமைச்சரிடம் அவர்கள் வழங்கினர். மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீலை, திங்களன்று தில்லியில் அவரது அலுவலகத்தில் திமுக நாடாளு மன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.

இச்சந்திப்பின்போது, கீழடி அகழாய்வுப் பகுதியை பாதுகாக்கப் பட்ட இடமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்; கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைப்பதற்காக உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைத்திட வேண்டும்; கீழடியின் வரலாற்று தொல்லியல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஏற்கெனவே இருக்கும் சென்னை மண்டல அலு வலகத்துடன் தென் தமிழகத்திற்காக மதுரையிலும் தொல்லியல் துறை அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.  இக்கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்ப தாக அமைச்சர் உறுதி அளித்தார்.

;