tamilnadu

img

நிர்பயா நிதியத்திற்காக ரூ.2.97 கோடி ஒதுக்கீடு... பி.ஆர். நடராஜன் எம்.பி.யின் கேள்விக்கு அமைச்சர் பதில்

புதுதில்லி:
புதிய நிர்பயா நிதியத்தின் குறிக்கோள் மற்றும் நோக்கங்கள் என்ன,ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது பி.ஆர். நடராஜன், புதிய நிர்பயா நிதியம் ஒன்று அரசாங்கம் அமைத்திருக்கிறதா?  அதன் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்கள் என்ன? அதற்கு ஒதுக்கிய தொகை எவ்வளவு? பாலியல் தாக்குதல்கள் நடைபெற்றால் அதனைக்கண்டறிவதற்காக கொள் முதல் செய்யப்பட்ட தடய அறிவியல் பெட்டிகள் எத்தனை வாங்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டிருக்கிறது? இதனால் பயன் அடைந்தவர்கள் மாநிலவாரியாக எத்தனை பேர் என்று  கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்மிருதி சுபின் இரானி எழுத்து மூலம் அளித்த பதிலில், மகளிர் பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதத்தில் புதிய நிர்பயா நிதியம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் செலுத்தப்படும் தொகை, காலாவதியாகாது. இது நிதியமைச்ச கத்தின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரங்கள் துறை நிர்வகித்து வருகிறது. நிர்பயா நிதியத்தின் கீழான திட்டங்களை மத்திய அரசு அல்லது அதன் ஏஜென்சிகள் அல்லது மாநில அரசாங்கங்கள் அமல்படுத்தி வருகின்றன என்று கூறினார்.அமைச்சர் மேலும் கூறுகையில், காவல்துறையும், பொது ஒழுங்கும் மாநிலப் பட்டியலின் கீழ் வருவதால், மாநில அரசாங்கங் களுக்கு இதுபோன்ற வழக்கு களில் காலத்தே புலனாய்வு மேற்கொள்வதற்காக,  பாலியல் தாக்குதல் சாட்சியத் தொகுப்புப் பெட்டிகள் (Sexual Assault Evidence Collecion Kits) 14,950பெட்டிகள் வாங்கி அளிக்கப்பட்டி ருக்கின்றன. இவை இணைப்பில் கண்டுள்ளவாறு மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன. நிர்பயா நிதியத்திற்காக 2.97 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இணைப்பில் பார்த்ததிலிருந்து மொத்தம் உள்ள 14,950 பெட்டிகளில் தமிழ்நாட்டிற்கு 279 பெட்டிகளும், புதுச்சேரிக்கு 92 பெட்டிகளும் ஒதுக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. (ந.நி.)

;