tamilnadu

img

அடுத்த காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங்?

புதுதில்லி:
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நாடு தழுவிய தோல்வியை அடுத்து அக்கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் காரிய கமிட்டியில் தெரிவித்தார்.

25ஆம் தேதி நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ததோடு நேரு குடும்பத்துக்கு வெளியே காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்ட தாகவும் தகவல்கள் பரவின. சில மூத்த தலைவர்கள் தனக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் வேதனை தெரிவித் தார் என்றும் ஊடகங்களில் தகவல்கள் வந்தன. ஆனால் இந்தத் தகவல்களை எல்லாம் திங்களன்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலா திட்ட வட்டமாக மறுத்தார்.

நாட்டின் அனைத்து மாநிலகாங்கிரஸ் தலைவர்களும் தில்லியில்தான் முகாமிட்டுள்ளனர். தனது ராஜினாமா முடிவை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தெரிவித்த ராகுல் காந்தியிடம் பல மூத்த தலைவர்கள் சென்று சமரசம் பேசியும் அவர் அந்த முடிவிலிருந்து பின்வாங்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.மேலும் தற்போதைய மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியா வில் தமிழகத்தில் 9 தொகுதிகள், கேரளாவில் 15 தொகுதிகள் காங்கிரஸ் வென்றுள்ளது. இதை யடுத்து வட இந்தியாவில் காங் கிரஸ் வெற்றிபெற்றுள்ள ஒரே மாநிலம் பஞ்சாப்தான். அங்கே மொத்தமுள்ள 13 தொகுதிகளில் 8 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

(ஆனாலும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் தனது குருதாஸ்பூர் தொகுதியில் வெற்றிபெற முடி யாமல் போனதற்காகத் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்)இந்தி பேசும் மாநிலங்களில் ஏற்கனவே படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ், தென்னிந்தி யரைத் தலைவராக தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. வட இந்தியா வில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் தனது வெற்றியை நிரூபித்துள்ளதை வைத்து, பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை காங்கிரஸ் தலைவராக நியமிக்கும் எண்ணமும் ராகுல் காந்தியிடம் இருப்ப தாகத் தெரிவிக்கிறார்கள் காங்கிரஸ் தில்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

பேச்சாற்றல் மிக்க அமரீந்தர் சிங் நேரு குடும்பத்தின் நீண்ட கால விசுவாசி ஆவார். 2017 சட்ட மன்றம், 2019 நாடாளுமன்றம் என இரு தேர்தல்களில் பஞ்
சாப்பில் காங்கிரஸ் வெற்றிக்குக் காரணமானவர். வட இந்தி யாவில் வீசிய மோடி அலை யிலும் பஞ்சாப்பில் பாஜக – அகாலிதளம் கூட்டணிக்கு 4 இடங்களே கிடைத்தன. ஒரு இடத்தை ஆம் ஆத்மி வென்றது. மீதி 8 இடங்களையும் காங்கிரசே கைப்பற்றி யது. அதற்குக் காரணம் அம ரீந்தர் சிங்கின் ஆட்சி மற்றும் பிரச்சாரமே. எனவே ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தலைவராக அமரீந்தரை ஆக்கலாம் என்ற திட்டம் உள்ளதாகத் தெரிகிறது என தில்லி வட்டாரம் கூறுகிறது.
 

;