tamilnadu

img

வட இந்தியர்களின் சராசரி ஆயுள் காலத்தை குறைக்கும் காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு 250 மில்லியனுக்கும் அதிகமான வட இந்தியர்களின் வாழ்க்கையை 8 வருடங்களை குறைக்கக்கூடும்.காற்று மாசுபாடு இந்தியாவில் சராசரி ஆயுட்காலம் 5.2 ஆண்டுகளாகக் குறைத்துள்ளதாக 20 ஆண்டு மாசு பகுப்பாய்வின் அடிப்படையில் ஒரு புதிய அறிக்கை கண்டறிந்துள்ளது.

காற்று மாசுபாட்டின் அளவு வெகுவாகக் குறைக்கப்படாவிட்டால், வட இந்தியாவில் கிட்டத்தட்ட 250 மில்லியன் மக்கள் எட்டு வருடங்களுக்கும் மேலாக ஆயுட்காலம் இழக்க நேரிடும் என்றும், 20 ஆண்டு மாசு பகுப்பாய்வின் அடிப்படையில் ஒரு புதிய அறிக்கை கண்டறிந்துள்ளது.

உலகின் இரண்டாவது மிக மாசுபட்ட நாடான இந்தியாவில் (முதலாவது பங்களாதேஷ்), உலக சுகாதார அமைப்பு (WHO) வழிகாட்டுதலை கடைபிடித்தால், காற்று மாசுபாடு சராசரி ஆயுட்காலத்தை 5.2 ஆண்டுகள் உயரும்.

ஆனால் இந்தியாவில் சில மாநிலங்கள் சராசரியை விட மிகவும் அதிகமாக காற்று மாசுபட்டுள்ளது. காற்று மாசுபாடு தலைநகரான டெல்லியில் 9.4 ஆண்டுகளும், மிகவும் மாசுபட்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் (உ.பி.) 8.6 ஆண்டுகளாக மக்கள் ஆயுள் காலம் குறைந்துள்ளது.

இந்த அறிக்கை ஜூலை 28, 2020 அன்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் (ஈபிஐசி) வெளியிட்டது. 

இந்தியாவில் அதிக ஆயுட்காலம் இழப்பது உ.பி.யின் தலைநகரான லக்னோவில் உள்ளது, இது நாட்டில் மிக உயர்ந்த மாசுபாட்டைக் கொண்டுள்ளது - WHO வழிகாட்டுதலை விட 11 மடங்கு அதிகம் - என அறிக்கை கூறியுள்ளது. அதே மாசு அளவு தொடர்ந்தால் அதன் குடியிருப்பாளர்கள் 10.3 ஆண்டுகள் ஆயுட்காலம் இழக்க நேரிடும்.

1998 முதல், இந்தியாவில் சராசரியாக மாசுபாடு 42 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள் தொகை வருடாந்திர சராசரியாக மாசுபாடு  உள்ள  பகுதிகளில் வாழ்கின்றனர், 

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மிகவும் மாசுபட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப மாசுபாடு குறைக்கப்பட்டால் டெல்லியில் வசிப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் 9.4 ஆண்டுகள் சேர்க்கப்படுவதைக் காணலாம்.

 இந்நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் மேற்கொண்ட இதேபோன்ற ஆய்வில், இந்திய மக்கள்தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் வசிக்கும் இந்தோ கங்கை சமவெளியில் காற்று மாசுபாடு  72 சதவீதம் அதிகரிக்க  இருப்பது கண்டறியப்பட்டது. இது நாட்டின் பிற பகுதிகளை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. மேலும் இப்பகுதியில் வாழும் குடிமக்களின் ஆயுட்காலத்தில் ஏழு வருடம்  இழக்க வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தற்போதைய EIA 2020 -யில் மத்திய அரசு ,புதிய நிறுவனங்களை ஆரம்பிக்க  பல்வேறு வசதிகளை அறிவித்த நிலையில் ,அடுத்து இந்தியாவின் நிலை மற்றும் இந்திய மக்களின் நிலை குறித்து அச்சம் எழும்புகிறது.

 

;