tamilnadu

img

அதிமுக-பாமக எதிர்த்து வாக்களித்திருந்தால் குடியுரிமை சட்ட திருத்தம் வந்திருக்காது... கே.பாலகிருஷ்ணன் கருத்து

திருநெல்வேலி:
நாடாளுமன்றத்தில் குடியுரிமை மசோதா கொண்டு வந்த போது அதிமுக, பாமக எம்.பி.க்கள் எதிர்த்து ஒட்டு போட்டிருந்தால் இந்த சட்டம் வந்திருக்காது என குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மேலப்பாளையத்தில் நடந்த கண்டனபொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார்.கொட்டும் மழையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், மத்தியில் பிரதமராக மோடிபதவியேற்ற பிறகு இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இப்போது முஸ்லிம்களுக்கு எதிராக குடியுரிமை சட்டத்தைமத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்கு அதிமுகஅரசு ஆதரவு தெரிவித்தது. அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்பதை காட்டுகிறது. பல லட்சம் மக்களை இந்த நாட்டின்குடிமக்கள் இல்லை என சொல்பவர்களிடம் சட்டம் கொண்டு வரப்படுகிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா கொண்டு வந்த போது அதிமுக-பாமக எதிராக வாக்களித்திருந்தால் இந்தச் சட்டம் வந்திருக்காது. திமுக-காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சி பின்னால் எந்த அமைப்பும் கிடையாது. ஆனால் பாஜகவுக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உள்ளது. அதுதான் பாஜகவை இயக்கிக் கொண்டிருக்கிறது.  மக்களிடம் பிரிவினைவாதத்தை தூண்டி விடுகிறது. இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னையில் டிச.23 ஆம் தேதி பிரம்மாண்டமான பேரணி நடக்கிறது. இந்த பேரணிக்கு பிறகும் கூட மத்திய அரசு இந்தசட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் பாஜக தலைமையிலான மத்திய அரசு நான்கு ஆண்டுகளில் நான்கு மணி நேரம் கூட ஆட்சியில் இருக்கமுடியாது என்ற நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

;