tamilnadu

img

‘ஆரோக்கிய சேது’ பயன்பாட்டை கட்டாயமாக்குவது சட்டவிரோதம்...

புதுதில்லி:
‘ஆரோக்ய சேது’ செயலி பயன்பாட்டைக் கட்டாயமாக்குவது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றமுன்னாள் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா கருத்து தெரிவித்துள்ளார்.மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சுகாதாரத் துறை இணைந்து ‘ஆரோக்கிய சேது’ (Aarogya Setu) எனும் கொரோனா விழிப்புணர்வு செயலியை 11 மொழிகளில் அறிமுகம் செய்துள்ளது. இந்தசெயலியை ஸ்மார்ட் போன்களில்பதிவிறக்கம் செய்து கொள்ளும்பட் சத்தில், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நபர் அருகில் இருந்தால், அதனை ‘ஆரோக்கிய சேது’ நமக்கு காட்டிக்கொடுத்துவிடும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக, இது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று சொல்லப்பட்டாலும், ‘ஆரோக்கிய சேது’ செயலியை பதிவிறக்கம் செய்வதற்காக  பயனாளர்கள் அளிக்கும் தகவல்களை, அரசு வேறு காரணங்களுக்காக பயன்படுத்தலாம் என்று சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மேலும், தனிநபர் ரகசியங்கள் திருடப்படலாம் என்ற அச்சமும் முன் னுக்கு வந்துள்ளது.மத்திய அரசோ இந்த புகார் களைக் கண்டுகொள்ளாமல், ‘ஆரோக்ய சேது’ பயன்பாட்டை, தனியார் மற்றும் பொதுத்துறை அலுவலகங்களின் ஊழியர்களுக்கு கட்டாயம்ஆக்கியுள்ளது. மற்றொரு புறத்தில், இச்செயலியைப் பதிவிறக்கம் செய்யாவிட்டால்,6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1000 வரை அபராதம்விதிக்கப்படும் என்று நொய்டா போலீசார் மிரட்டவும் செய்துள்ளனர்.

இந்நிலையில் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதாவின் முதல் வரைவுக் குழு தலைவராக இருந்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிபி.என்.ஸ்ரீகிருஷ்ணா, “ஆரோக்கியசேது பயன்பாட்டை கட்டாயப்படுத் தும் அரசாங்கத்தின் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.“எந்தச் சட்டத்தின் கீழ் ஆரோக்கியச் செயலியைக் கட்டாயப்படுத்துகிறீர்கள்? இவ்வாறு செய்வதற்கு எந்தவொரு சட்டமும் இல்லையே...” என்று கூறியுள்ள நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, “நொய்டா போலீஸ் உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது” என்றும் இந்தியா இன்னும் ஒரு ஜனநாயக நாடு என்று தான் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

;