tamilnadu

img

வீழ்ச்சியில் 8 முக்கிய தொழிற்துறைகள்...

புதுதில்லி:
இந்தியாவின் 8 முக்கிய தொழிற்துறைகளின் வளர்ச்சியானது கடந்த மே மாதத்தில் 23.4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகஅதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொரோனாவுக்கு முன்பே இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையில்தான் இருந்தது. கொரோனா அதனை மேலும் மோசமாக்கி விட்டது. இதன் காரணமாக, மார்ச்,ஏப்ரல் மாதங்களைத் தொடர்ந்து மூன்றாவது மாதமாக மே-யிலும் முக்கிய தொழிற்துறைகள் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.அடிப்படைத் தொழிற்துறைகள் (Infrastructure Sectors) என்று கூறப் படும், நிலக்கரி, மின்சாரம், இயற்கை எரிவாயு, எஃகு, சிமெண்ட், கச்சா எண்ணெய்,பெட்ரோலிய சுத்திகரிப்பு, உரம் ஆகிய8 தொழிற்துறைகள் எதிர்மறை வளர்ச்சியில் பயணிக்கத் துவங்கின.அந்த வகையில், ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்தில் இத்துறைகளின் வளர்ச்சியானது 23.4 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் செவ்வாய்கிழமையன்று அறிவித்துள்ளது.

உரத்துறையைத் தவிர, ஏனைய ஏழுதுறைகளும் எதிர்மறையான (Index of Industrial Production -IIP) வளர்ச்சியினையே பதிவு செய்துள்ளன. உரத்துறை7.5 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மற்றபடி எஃகு 48.4 சதவிகிதம், சிமெண்ட்22.2 சதவிகிதம், மின்சாரம் 15.6 சதவிகிதம்,சுத்திகரிப்பு பொருட்கள் 21.3 சதவிகிதம் எனஉற்பத்தி வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.2019-ஆம் ஆண்டின், இதே ஏப்ரல் - மே காலத்தில், 8 அடிப்படைத் தொழிற்துறைகளும் 4.5 சதவிகிதம் வளர்ச்சியைக் கண்டிருந்தன. குறிப்பாக 2019 மே மாதத்தில் மட்டும் 3.8 சதவிகிதம் ஏற்றம் கண்டிருந்தன.

ஆனால், தற்போது மே மாதத்தில் 23.4 சதவிகிதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளன.ஏப்ரல் மாதத்தில் ஐஐபி 37 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்து இருந்த நிலையில், மே மாதம் சற்று ஆறுதல் அளிக்கிறது.எனினும், மே மாதத்திலேயே இப்படி எனில் இனி வரும் மாதங்களில் இந்த உற்பத்தி விகிதங்களானது மேலும் மோசமாகலாம் என்று அச்சமும் தெரிவிக்கப்படுகிறது. ஆள் பற்றாக்குறை, சரியான மூலப்பொருட்கள் கிடைக்காமை, சரியான மூலதனம் இன்மை போன்ற பிரச்சனைகளை தொழில்துறை சந்தித்து வரும் நிலையில், சுத்திகரிப்பு மற்றும் கச்சா எண்ணெய் துறை மட்டும், சற்று வளர்ச்சி காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

;