இந்தியாவில் புதிய உச்சமாக 56282 பேர் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,64,537- ஆக உள்ளது. மேலும் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 904-பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,699- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்புடன் இன்றைய நிலவரப்படி 5,95,501-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13,28,337-பேர் தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்துள்ளனர்.