tamilnadu

img

50 இந்திய செயல் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய வால்மார்ட்!

புதுதில்லி:
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும், உலகின் பன்னாட்டு பகாசுரக் கம்பெனியான வால்மார்ட், இந்தியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனத்துக்கு இந்தியாவில் 28 சில்லரை வர்த்தக நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கிருந்து சில்லரை விற்பனையாளர்களுக்குப் பொருட்கள் விற்பனை செய்யப்படும்.இந்நிலையில், இந்தியாவில் தனது ஆதிக்கத்தை நீட் டிக்கவும், சந்தைப் பங்கை உயர்த்தவும் அதிகளவில் முதலீடு செய்துவருவதாக கூறும்வால்மார்ட், தற்போது தொழில் சீரமைப்புப் பணிஎன்ற பெயரில், ஆட்குறைப் பில் இறங்கியுள்ளது.அதன் ஒரு நடவடிக்கையாக, ஊழியர்கள் பலரை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து வருகிறது. குறிப்பாக,50 செயல் அதிகாரிகளை ‘வால்மார்ட்’ நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. வால் மார்ட் நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவில் வளர்ச்சி போதுமான அளவில் இல்லாததால் அந்தப் பிரிவிலேயே ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆன்லைன் விற்பனையில் அதிகக் கவனம் செலுத்துவதால் நேரடி விற்பனைத் தொழிலில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்தான் என்று ‘வால்மார்ட்’ நிறுவனம்தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் 50 இந்தியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்புஇன்னும் வெளியாகவில்லை.

;