tamilnadu

img

5 டிரில்லியன் டாலர் சாத்தியம் இல்லை... முதலீடுகள் அதிகரிக்காமல் எதுவும் நடக்காது

புதுதில்லி:
முதலீடுகளை அதிகரிக்காமல் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக உயர்வதற்கு சாத்தியம் இல்லைஎன ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின்தலைவர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார்.கடந்த சில மாதங்களாக இந்திய பொருளாதாரம் கடும் தேக்க நிலையைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சி, பல்வேறு தொழில்களின் நலிவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு மற்றும் வங்கிகளில் வராக்கடன் அதிகரிப்பு என பல்வேறு அம்சங்கள் பொருளாதார வீழ்ச்சியை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன.

இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்க கூட்டமைப்பின் 92-ஆவதுஆண்டுக் கூட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆப்இந்தியாவின் (எஸ்பிஐ) தலைவர் ரஜ்னீஷ் குமார், பொருளாதார தேக்கநிலைக்குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசியுள்ளார்.அதில்தான், “இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற இலக்கைஅடையவேண்டுமெனில், டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். தற்போதைய சூழலில் முதலீடுகளை அதிகரிக்காமல் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன்டாலராக உயர்த்துவது என்பது சாத்தியமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.“வங்கிகளுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை உள்ளது. அதற்கு அப்பால் வங்கிகளால் செயல்பட முடியாது; குறிப்பாக, வட்டி விகிதங்களைப் பொறுத்தமட்டில் வங்கிகளால், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் அதனைக் குறைக்க முடியாது” என்று கூறியுள்ள ரஜ்னீஷ் குமார், வங்கிகளிடம் மூலதனப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், தற்போது 30 சதவிகிதமாக இருக்கும் மொத்த மூலதன விகிதம்,குறைந்தது 37 முதல் 38 சதவிகிதமாக உயரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.மற்றொரு புறத்தில், இந்தியாவின் தற்போதைய கடன் வரம்பு 8 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது; ஆனால் 5 முதல் 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன; அரசிடம் போதிய திட்டங்கள் இல்லாததால், வங்கிகளால் கடன் கொடுக்க முடியாமல் போகிறது என்றும் ரஜ்னீஷ் குமார் கூறியுள்ளார்.

;