tamilnadu

img

இந்திய சிறைவாசிகளில் 45% பேர் தலித்துக்கள், பழங்குடிகள், முஸ்லிம்கள்...

புதுதில்லி:
இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட் டுள்ள சிறைவாசிகளில் சுமார் 45 சதவிகிதம் பேர் தலித்துகள், பழங்குடியினர் மற்றும்முஸ்லிம்கள் என்ற புள்ளி விவரம், தேசியகுற்ற ஆவணக் காப்பக அறிக்கை மூலம்தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்ல, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம் சிறைவாசிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொதுப்பிரிவினர், உயர் சாதியினரின் எண்ணிக்கைகுறைவாகவே இருக்கிறது என்றும் தேசியகுற்ற ஆவணக் காப்பகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.2019-ஆம் ஆண்டு தகவலின்படி, நாட்டிலுள்ள தண்டனை சிறைவாசிகளில் தலித்துக்களின் எண்ணிக்கை மட்டும் 21.7 சதவிகிதமாக உள்ளது. விசாரணை சிறைவாசி
களின் எண்ணிக்கையிலும் 21 சதவிகிதம் பேர் தலித்துக்களாக உள்ளனர். 

அதேபோல பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள், தண்டனை சிறைவாசிகளின் எண்ணிக்கையில் 13.6 சதவிகிதமாகவும், விசாரணை சிறைவாசிகளின் எண்ணிக்கையில்10.3 சதவிகிதமாகவும் உள்ளனர். இந்திய மக்கள்தொகையில், முஸ்லிம்கள் 14.2 சதவிகிதமாக உள்ளனர். ஆனால், தண்டனை சிறைவாசிகளில் அவர்களின் எண்ணிக்கை 16.6 சதவிகிதமாகவும்,  விசாரணை சிறைவாசிகளில் 18.7 சதவிகிதமாகவும் உள்ளது.தலித்துக்கள், பழங்குடிகள், முஸ்லிம்கள் என மூன்று பிரிவினருமே அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தைக் காட்டிலும் அதிகமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.2011 கணக்கெடுப்புப் படி, நாட்டின் மக்கள் தொகையில் தலித்துக்கள் 16.6 சதவிகிதம். ஆனால், சிறைகளிலோ அவர்கள் 21.7 சதவிகிதமாக உள்ளனர். பழங்குடியினர் மக்கள் தொகை எண்ணிக்கையும் 2011 கணக்கெடுப்புப்படி 8.6 சதவிகிதம். ஆனால் சிறைகளிலோ அது 13.6 சதவிகிதமாக இருக்கிறது.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி, 2015-ஆம் ஆண்டில் 20.9 சதவிகிதமாக இருந்த முஸ்லிம் விசாரணை சிறைவாசிகளின் எண்ணிக்கை 2019-இல் 18.7 சதவிகிதமாக சற்று குறைந்துள்ளது. எனினும், தண்டனை சிறைவாசிகளின் எண்ணிக்கையை (16.6) விட விசாரணை சிறைவாசிகளின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.பட்டியல் சிறைவாசிகளின் எண் ணிக்கையைப் பொறுத்தளவில், கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாற்றமும் நடக்கவில்லை. 2015-ஆம் ஆண்டில் மட்டுமல்லாது2019-ஆம் ஆண்டிலும் தண்டனை சிறைவாசிகள் மற்றும் விசாரணை சிறைவாசிகள் 21 சதவிகிதமாகவே உள்ளனர்.இதுவே பழங்குடியினரை எடுத்துக் கொண்டால் இந்தியச் சிறையில் 2015-ஆம் ஆண்டு 13.7 சதவிகிதத்தினர் தண்டனைசிறைவாசிகளாகவும், 12.4 சதவிகிதத்தினர் விசாரணை சிறைவாசிகளாகவும் உள்ளனர். 2019-ஆம் ஆண்டில் இதன் அளவு13.6 சதவிகிதம் மற்றும் 10.5 சதவிகிதமாக உள்ளது.எஸ்.சி., எஸ்.டி. மற்றும் முஸ்லிம் மக்களின் நிலை இவ்வாறிருக்க, நாட்டின் மக்கள்தொகையில் 41 சதவிகிதம் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும்பொதுப்பிரிவினரிடையே 2006-ஆம்ஆண்டு நடத்தப்பட்ட மாதிரி சோதனையில், ஓபிசி மற்றும் பொதுப்பிரிவினரில் 35 சதவிகிதத்தினர் தண்டனை சிறைவாசிகளாகவும், இருபிரிவுகளிலும் 34 சதவிகிதத்தினர் விசாரணை சிறைவாசிகளாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை சராசரியை விடவும் குறைவாக பதிவாகியுள்ளது.

உயர்சாதி இந்துக்கள் மற்றும் மற்ற மதங்களில் உள்ள வகைப்படுத்தப்படாத பிரிவினர், நாட்டின் மக்கள் தொகையில் 19.6 சதவிகிதமாக உள்ள நிலையில், அவர்களிலும் 13 சதவிகிதத்தினர் மட்டும் தண்டனை சிறைவாசிகளாகவும் 16 சதவிகிதத்தினர் மட்டுமே விசாரணை சிறைவாசிகளாகவும் இருப்பது தெரியவந்துள்ளது.தலித்துக்கள், பழங்குடிகள் மற்றும்முஸ்லிம்கள் அதிகளவில் சிறையில் இருக் கும் மாநிலங்களை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் அவை உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரசேதம், பீகார், பஞ்சாப், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களாகவே இருக்கின்றன.

;