tamilnadu

img

தனியாருக்கு ஏலம் விடப்பட்ட 41 நிலக்கரிச் சுரங்கங்கள்...

புதுதில்லி:
‘சுயசார்பு இந்தியா’வை (ஆத்ம பாரத் நிர்பர் அபியான்) உருவாக்கப் போகிறோம் என்ற பெயரில், நாடு முழுவதும் உள்ள 41 நிலக்கரிச் சுரங்கங்களை தனியார் முதலாளிகளுக்கு கொடுக்க மோடி அரசு அண்மையில் முடிவு செய்தது.இதற்கு உடனடியாக இடதுசாரிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. வெறும் 33 ஆயிரம் கோடிரூபாய் அளவுக்கான- அதுவும் 7 ஆண்டுகளில் வரக்கூடிய- தனியார் முதலீடு களுக்காக, பல லட்சம் கோடி மதிப்பிலான நாட்டின் இயற்கை வளங்களை மோடி அரசு சூறையாடுவதாக குற்றம் சாட்டின.ஆனால், எதிர்ப்பையும் மீறி, பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 18 அன்று தில்லியில் இருந்தபடியே காணொளி மூலம் நிலக்கரி ஏல நடைமுறையைத் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் அரசு, மத்திய மோடி அரசின் அறிவிப்பை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.1908-ஆம் ஆண்டின் சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் (Chhota  Nagpur Tenancy Act, 1908), 1949ஆம் ஆண்டின் சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம் (Santhal Pargana Tenancy Act, 1949) ஆகியவை பழங்குடியினரின் கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் பாதுகாக்க, நிலத்தைக் கைமாற்றுவதைத் தடை செய்கிறது. அவ்வாறிக்கையில், நிலக்கரிச் சுரங்கங்களை தனியார் கொள்ளைக்கு திறந்துவிடும் மத்திய அரசின் நடவடிக்கை காட்டு வளங்களையும், பழங்குடியினரின் கலாச்சாரத்தையும் அழித்துவிடும் என்று ஜார்கண்ட் அரசு மனுவில் தெரிவித்திருந் தது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.இந்த மனு, உச்சநீதி மன்றத் தலைமைநீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில், 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

;