tamilnadu

img

வீடுகளுக்கு அனுப்பப்படும் 3 ஆயிரம் தப்லீக் உறுப்பினர்கள்?

புதுதில்லி:
கொரோனா பாதிப்பு இல்லாத நிலையிலும் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேரை, ஒரு மாதத் திற்கும் மேலாக தனிமைப்படுத்தி வைத்த விவகாரம் தொடர்ந்து விவாதங்களை கிளப்பி வந்தது.இப்பிரச்சனையில் மத்திய உள் துறை அமைச்சகத்துடன் இரண்டு வாரங் களாக போராடி வந்த தில்லி அரசு, தற்போது இந்தியாவைச் சேர்ந்த 2500 பேரை வீடுகளுக்கு அனுப்பி வைப்பதென முடிவு எடுத்துள்ளது.

தில்லியில் நிஜாமுதீனில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத்தின் கூட்டம் நாடு முழுவதும் கொரோனா பரவியதற்கு காரணம் என்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளால் குற் றம் சாட்டப்பட்டது.இதுதொடர்பாக தில்லி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டது. பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த தப்லீக் ஜமாத்தின் சில உறுப்பினர்கள், விசா நிபந்தனைகளை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டனர். 

முன்னதாக நிஜாமுதீனில் உள்ள மார்கஸ் மசூதியிலிருந்து சுமார் 2 ஆயிரத்து 346 பேரை மத்திய அரசு வெளியேற்றியது. அவர்களில் 536 பேர் மருத்துவமனைகளுக்கும், மீதமுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், ஒரு மாதத்திற்கு மேலாகியும் கொரோனாபாதிப்பு இல்லாத தப்லீக் உறுப்பினர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

இவர்களை விடுவிப்பது தொடர் பாக கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசு, உள்துறை அமைச்சகத் துக்கு இரண்டு முறை கடிதமும் எழுதியது. தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த 3 ஆயிரம் உறுப்பினர்கள், கொரோனாபாதிப்பு இல்லாத நிலையிலும் 21 நாட்களுக்கு மேலாக தில்லியின் பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை விடுவிப்பதில்மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை விரைவில் தெரிவிக்க வேண்டும் என்று அந்தகடிதங்களில் கேட்டது.ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் முறையான பதில் எதையும் தெரிவிக்கவில்லை. தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், இதுதொடர்பாக அளித்த பேட்டியில், “தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த 3 ஆயிரம் பேரிடம் காவல்துறையினர் விசாரணை எதுவும் மேற்கொள்ள வேண்டியிருந்தால் தாராளமாக மேற்கொள்ளலாம்” என்றும், “மற்றபடி கொரோனாபாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத் தப்பட்ட தப்லீக் உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கவேண்டும்” என்றும் வலியுறுத்தியுள் ளார்.

ஆனால், அதற்கும் பதிலில்லை.இந்நிலையில்தான், வெளிநாடுகளைச் சேர்ந்த தப்லீக் உறுப்பினர்கள் 567 பேர் தவிர, மீதமுள்ள இந்தியாவைச் சேர்ந்த 2 ஆயிரத்து 446 பேரைவீடுகளுக்கு அனுப்பிவைக்க தில்லிஅரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கைகளை அனுப்பியுள்ளது.தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து விடுவிக்கப்படும் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் வீடுகளைத் தவிர மசூதிகள் உட்பட வேறு எந்த இடத்திலும் தங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

;