tamilnadu

img

2019-இல் ஒரே ஒரு நானோ கார் விற்பனை

புதுதில்லி:

2019-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் டாடா நிறுவனத்தின் சார்பில் ஒருநானோ கார்கூட தயாரிக்கப்படவில்லை என்றும், பிப்ரவரி மாதத்தில் ஒரே ஒரு கார் மட்டுமே விற்பனையாகி உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.ரத்தன் டாட்டாவின் கனவு திட்டம் நானோ கார். கடந்த 2008-ஆம் ஆண்டு ஆட்டோமொபைல் எக்ஸோபில் அனைவரின் கவனத்தையும் டாடா நானோ கார்ஈர்த்தது. ஒரு லட்சத்துக்கு கார் விற்பனைசெய்யப்படும் என்ற ரத்தன் டாட்டாவின்அறிவிப்பு பரபரப்பை அதிகப்படுத்தியது.
ஆனால், நானோ காரின் செயல்பாட் டில் ஏற்பட்ட சிக்கல்கள், அடுத்தடுத்து வந்த புகார்கள், இன்ஜின்களில் கோளாறுகள் ஆகியவற்றால் நானோ கார் விற்பனை சரியத் தொடங்கியது. கடந்த 2018-ஆம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரை 297 நானோ கார்கள் தயாரிக்கப்பட்டன. 299 கார்கள் விற்பனை செய்யப்பட்டன.ஆனால், 2019-ஆம் ஆண்டிலோ, ஒரே ஒரு நானோ கார் மட்டுமே விற்பனையாகியுள்ளது. உற்பத்தி என்று பார்த்தால் ஒன்றுகூட இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.நானோ கார் தயாரிப்பு நிறுத்தப்படுகிறது என்று டாடா நிறுவனத்தால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், 2020ம் ஆண்டு பிஎஸ்-6 வகை இன்ஜின்கள் கார்களில் பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், அந்த வகை இன்ஜின் நானோ காருக்கு பொருந்தாது என்பதால் 2020-ஆம் ஆண்டில் நானோ கார் தயாரிப்பு முற்றிலுமாக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

;