tamilnadu

img

கொரோனா அபாயம் நீங்கும்வரை பள்ளிகளை திறக்கக்கூடாது...

புதுதில்லி:
கொரோனா அபாயம் முற்றிலும் நீங்கும்வரை பள்ளிகளை திறக்கக்கூடாது என்று 2 லட்சம் பெற்றோர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.கொரோனா தொற்றால் மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கி, அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் ஜூலை மாதம் ஆலோசனை நடத்திய பிறகு, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 2 லட்சத்து 13 ஆயிரம் பெற்றோர்கள் கையெழுத்திட்ட மனு ஒன்று, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  அந்த மனுவில் கூறியிருப்பதாவது:ஜூலை மாதம் பள்ளிகளை திறப்பது என்பது அரசின் மிகமோசமான முடிவாகும். நெருப்பை அணைக்க வேண்டி இருக்கும்போது, நெருப்புடன் விளையாடுவதற்கு சமமானது. நடப்பு முதலாவது பருவம்,ஆன்லைன் வழியிலேயே நீடிக்க வேண்டும். கொரோனா அபாயம் முற்றிலும் நீங்கும்வரையோ, அல்லது தடுப்பூசி கண்டு பிடிக்கும் வரையோ பள்ளிகளை திறக்கக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

;