tamilnadu

img

கடுமையான வருவாய் இழப்பில் 13 மாநிலங்கள்... கடந்தாண்டை விட 285 சதவிகிதம் அதிகரித்தது; நிதிப் பற்றாக்குறையும் 40 சதவிகிதம் அதிகரிப்பு

புதுதில்லி
2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்)இந்தியாவிலுள்ள 18 மாநிலங்களின் வருவாய்ப்பற்றாக்குறை 285 சதவிகிதமும், நிதிப் பற்றாக்குறை 40.7 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ (India Ratings) நிறுவனம் கூறியுள்ளது.

வருவாய்ப் பற்றாக்குறையானது ஜூன் காலாண்டில் 12.9 சதவிகிதமாக இருக்கும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது. நிதிப்பற்றாக்குறை கடந்த 2019 ஜூன் காலாண்டில் 13.4 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. ஆனால், 2020 ஜூன் காலாண்டில்இந்த இரண்டுமே பல மடங்கு அதிகரித்துள்ளது.அதேபோல, மாநிலங்களின் வருவாயும் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 18.41 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளது. செலவினங்கள் கடந்த ஆண்டை விட 11.7 சதவிகிதம் அதிகரித்துள்ளன.இதில் குறிப்பிடப்படவேண்டியது சத்தீஸ்கர் (-9.0%), இமாசலப்பிரதேசம் (-3.9%), நாகலாந்து (இமாசலப்பிரதேசம் (-2.2%), மற்றும் ஒடிசா (-0.4%) ஆகிய மாநிலங்களைத் தவிர ஏனைய மாநிலங்கள் இரட்டை இலக்க வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன என்பதுதான்.ஹரியானா (-47.8%), கேரளா (-30.0%), உத்தரப்பிரதேசம் (-29.5%),ராஜஸ்தான் (-28.0%), குஜராத் (23.3%), தமிழ்நாடு (23.2%), தெலுங் கானா (22.6%),ஜார்க்கண்ட் (22.0%) ஆகிய மாநிலங்கள் இரட்டை இலக்க வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன.மேகாலயா (37.5%), திரிபுரா(34.8%), ஆந்திரப்பிரதேசம் (34.7%),சிக்கிம் (17.9%), மற்றும் உத்தரகண்ட்(15.4%) ஆகிய மாநிலங்கள் மட்டுமே 2020-21 நிதியாண்டின் ஜூன்காலாண்டில் வருவாயை அதிகரித் துள்ளன. அதேபோல வருவாய் செலவினங்களை எடுத்துக் கொண்டால், ஆந்திரா (113.2%), தெலுங்கானா (45.0%), சிக்கிம் (20.0%), நாகாலாந்து (19.5%), உத்தரகண்ட் (19.5%), திரிபுரா (18.3%), கேரளா (15.9%), மேகாலயா (15.4%), ராஜஸ்தான் (12.2%) ஆகிய மாநிலங்களில் அவை இரட்டை இலக்கத்தில் அதிகரித்துள்ளன. மாறாக, கர்நாடகா (6.0%), தமிழ் நாடு (2.4%) ஆகிய மாநிலங்களில் வருவாய் செலவினம் ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. சத்தீஸ்கர் (-17.5%), ஒடிசா (-9.4%), ஜார்க்கண்ட் (-7.4%), உத்தரப்பிரதேசம் (-2.5%), இமாசல பிரதேசம் (-0.8%), குஜராத் இமாசல பிரதேசம் (-0.7%) ஆகிய மாநிலங்களில் கடந்த ஆண்டை விட செலவினங்கள் குறைந்துள்ளன.

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 18 மாநிலங்களில் சம்பள செலவினங் கள் மற்றும் ஓய்வூதியம் 10.5 சதவிகிதமும், மானியங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 39.3 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. பொதுமக்களுக்கான சுகாதாரம் சம்பந்தமான செலவினம் 40.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.தமிழ்நாடு, கேரளா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கான செலவினங்கள் மிகப்பெரிய அளவிற்குகுறைந்துள்ளன. சத்தீஸ்கர், ஹரியானா, ஜார்க்கண்ட் மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மானியங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில், 2020 ஏப்ரல்- ஜூன் காலாண்டில் இந்திய மாநிலங்கள் மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ளதை ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ ஆய்வுகள் காட்டியுள்ளன.