விசாக பட்டினத்தில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாக பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் எதிர்பாராத விதமாக ராட்சத கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் விசாக பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.