tamilnadu

img

இந்திய நிறுவனங்கள் மூலம் 1.25 லட்சம் பேருக்கு வேலை...

புதுதில்லி:
கொரோனா காரணமாக, இந்தியாவில் சுமார் 12 கோடி பேரின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலை மேலும் மோசமாகலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புக்களை, இந்திய நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.“அமெரிக்காவில் இந்தியாவின் வேர்-2020” என்ற தலைப்பில் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்தான், டெக்சாஸ், கலிபோர்னியா, போர்டோ ரிகா, வாஷிங்டன், புளோரிடா உள்ளிட்ட 50 அமெரிக்க நகரங்களில் இந்தியாவைச் சேர்ந்த 155 நிறுவனங்கள் 22 பில்லியன் டாலர் வரையில் (சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி) முதலீடு செய்துள்ளதாகவும், மேலும் இந்தியநிறுவனங்கள் அங்கு 1.25 லட்சம் பேருக்குவேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக டெக்சாஸ் மாகாணத்தில் 9.5 பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ள இந்திய நிறுவனங்கள், இதன்மூலம் அங்கு மொத்தம் 17 ஆயிரத்து578 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.

அமெரிக்காவில் தொழில் நடத்தும் இந்திய நிறுவனங்களில் சுமார் 77 சதவிகித நிறுவனங்கள் தொடர்ந்து அமெரிக்காவிலேயே முதலீடு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளன.

;