tamilnadu

img

புர்காவுக்கு மட்டும் ஏன், கூங்கட்டுக்கும் தடை விதிக்கலாம்!

புதுதில்லி:

ஈஸ்டர் பண்டிகையன்று, இலங்கையில் 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 300-க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், பயங்கரவாதிகளை அடையாளம் காணுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று கூறி, இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.


இதையடுத்து, இந்தியாவிலும் இஸ்லாமியப் பெண்கள் புர்கா அணிவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் கூப்பாட்டை துவக்கியுள்ளன.

இந்நிலையில், புர்காவோடு, கூங்கட்டுக்கும் தடை விதிக்கலாம் என்று புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான ஜாவேத் அக்தர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:


இந்தியாவில் புர்காவைத் தடை செய்யும் வகையில் சட்டம் இயற்றுவதில் எனக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை. அதேநேரத்தில், இந்துப் பெண்கள் சேலையால் தங்கள் தலை மற்றும் முகத்தை மறைக்கும் வகையில் முக்காடு போடுகின்றனர். இதை கூங்கட் என்று அழைக்கிறார்கள். இந்த நடைமுறை ராஜஸ்தானில் மிக அதிகமாக உள்ளது. எனவே, ராஜஸ்தான் தேர்தலுக்கு முன்னதாக இந்த முறைக்கும் இந்திய அரசு தடை விதிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, கூங்கட் மற்றும் புர்கா ஆகிய இரண்டுக்கே தடை விதிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். என் வீட்டில் உள்ள பெண்கள் யாரும் புர்கா அணிவதில்லை. இராக் நாட்டிலும் பெண்கள் முகத்தை மூடிக் கொள்வதில்லை.

இவ்வாறு ஜாவேத் அக்தர் கூறியுள்ளார்.


;